இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு

பிறப்பு : - இறப்பு :

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளது.

இதன்படி 92 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 140 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதுடன், 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 164 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதனுடன், சூப்பர் மற்றும் ஒட்டோ டீசலின் விலையும் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் புதிய விலை 111 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதுடன், சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 136 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

நிதியமைச்சு இதனை அறிவித்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது, எரிபொருளின் விலை குறைக்கப்படும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit