நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன.

அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரின் வருகைக்காக பிற்பகல் 2 மணி வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் சட்டமா அதிபரின் பிரசன்னத்துடன் பரிசீலனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்ற வேளையில் இது குறித்து தமது நிலைப்பாட்டை தெரிவிக்க கால அவகாசம் தேவை என சட்டமா அதிபரால் கோரப்பட்டது.

இதனை கருத்திற் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் நாளை முற்பகல் 10மணிக்கு தொடர்ந்து பரிசீலனை இடம்பெறும் எனவும் இதன்போது சட்டமா அதிபர் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவித்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*