பெண்களால் மோசமாக கற்பழிக்கப்பட்ட ஆண்களின் கதிகளை விளக்கும் 7 சம்பவங்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மறதி நம் தேசிய வியாதி என்று அடிக்கடி நாம் கூறி வருகிறோம். ஆம்! இது உண்மை தான். அதே போல நீங்கள் மற்றுமொரு உண்மையும் அறிந்துக் கொள்ள வேண்டும். கற்பழிப்பு உலக வியாதியாக உருவெடுத்திருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கற்பழிப்பு சம்பவங்கள் மணிக்கொரு முறை நடந்துக் கொண்டிருக்கிறது. ஆம்! பெண்கள் நிறைய பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் கருதலாம். ஆனால், ஆண்களும் கற்பழிப்பு குற்றத்தால் பாதிக்கப்படுகிறார்கள், பட்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. கற்பழிப்பு வழக்கு என்று வரும் போது, ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற நிலை இருக்கிறதா? என்ற பெரும் கேள்வியை எழுகிறது… உலகில் பெண்களால் ஆண்கள் கற்பழிக்கப்பட்ட சில நிகழ்வுகளும், அதற்கு அவர்கள் பெற்ற தண்டனைகளும்…

ஒப்பிடுகையில் விகிதத்தில் பெண்களால் கற்பழிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால், குற்றம் ஒன்றெனில், அதற்கான தண்டனையும் ஒன்றாக தானே இருக்க வேண்டும்… ஆனால், இங்கே அப்படியான நிலை இல்லை. அதை விளக்கும் சம்பவங்கள் தான் இவை…

கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணின் பெயர் லெஸ்டினா மேரி ஸ்மித். இவர் கத்தி முனையில் தனது ஒரு ஆணை கற்பழித்தார். இந்த வழக்கின் தீர்ப்பாக இவரை சிறை தண்டனை கூட வழங்கப்படவில்லை என்பது தான் விசித்திரம். மேரி ஸ்மித் தனது முன்னாள் காதலனை தான் கற்பழித்தார்.

மேரி ஸ்மித்தும், இவரால் கற்பழிக்கப்பட்ட அந்த ஆணும் இரண்டு மாதங்கள் மட்டுமே டேட் செய்து வந்துள்ளனர். சில காரணங்களால் இவர்கள் இருவரும் மிக குறுகிய காலத்தில் பிரிந்துவிட்டனர். முன்னாள் காதலர் மேரி ஸ்மித்தை தனது முகநூல் பக்கத்தில் மோசமான வார்த்தையில் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மேரி ஸ்மித் எக்ஸ் காதலனின் காரினுள் புகுந்து, அவரது தோள்பட்டையில் கத்தியால் குத்தி, தன்னுடன் ஓரல் செக்ஸில் ஈடுபட கூறியுள்ளார். தான் கூறுவதை செய்ய மறுத்தால் கத்தியால் குத்துவிடுவேன் என்று மிரட்டிய அவர், மறு கையில் தனது மொபைல் போன் மூலமாக அதை வீடியோவும் எடுத்துள்ளார்.

எந்த பாலினத்தை சேர்ந்தவர் செய்தாலும் இதுவொரு பெரிய குற்றம் தான். ஆனால், மேரி ஸ்மித்துக்கு சிறை தண்டனை கூட வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக ஐந்து ஆண்டுகள் அவரது நன்னடத்தை சோதனைக்கு உட்பட்டு வைத்திருக்க வேண்டும் என்ற தீர்ப்பே நீதிமன்றம் வழங்கியது.

கொலின் ஹெர்மீஸ்மன் என்ற இளம் பெண் குழந்தை பராமரிப்பாளர் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவர் 12 வயதிலான சிறுவனை பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்தி இருக்கிறார். அந்த சிறுவன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், சிறுவனை பாலியல் உறவில் ஈடுபட தூண்டியது என்பது குற்றம்.

ஏறத்தாழ சிறுவர் பாலியல் துன்புறுத்தல் சார்ந்த இந்த வழக்கை நீதிமன்றம், தவறான நடத்தை என்ற வழக்குக்கு மாற்றியது. சிறுவனை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்ணுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக, இது அறியாமல் நடந்த தவறான சம்பவம் என்று கூறி தீர்ப்பளித்தது நீதிமன்றம். மேலும், எதிர்ப்பு தெரிவிக்காத சிறுவன் மீதும் தவறு இருக்கிறது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓல்கா ஜாசக் என்பவர் திருடன் ஒருவனை பிடித்து, தனது சலூனில் கட்டிவைத்து மூன்று நாட்களாக தொடர்ந்து கற்பழித்து வந்தார். இங்கே விவாதங்கள் ஒரு ஆண் கற்பளிக்கப்பட்டான் என்பதை தவிர்த்து, ஓல்கா ஒரு சிறந்த பெண்ணியவாதி என்பது போல திசை மாறியது. திருட்டு குற்றம் தான், அதற்காக கற்பழிக்கலாமா? இதுவே ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால், அந்த ஆணை இந்த உலகம் ஹீரோவாக கொண்டாடி இருக்குமா.

ஓல்கா ஜாசக்கிற்கு முகநூலில் பக்கங்கள் எல்லாம் உருவாக்கி கொண்டாடி மகிழ்ந்தனர். செக்ஸுவல் குற்றத்தில் ஈடுபட்ட ஒரு பெண் எப்படி ஹீரோவானார். இப்படி ஒருபக்கம் பிரபலமாக பரவிய இந்த ஓல்கா வழக்கானது புரளி என்றும் பலர் கூறுகிறார்கள்.

இப்படியான வழக்குகள் மேற்கத்திய நாடுகளில் பலவன நிகழ்ந்துள்ளது. உயர் பள்ளி ஆசிரியை ஸ்டீபனி பீட்டர்சன் எட்டாவது படிக்கும் மாணவருக்கு செக்ஸியான படங்களை அனுப்பியும், அவருடன் உல்லாசமாக இருக்கவும் வற்புறுத்தியதாக இந்த வழக்கு பதிவானது.

ஆனால், இந்த வழக்கில் ஆசிரியை ஸ்டீபனி பீட்டர்சன் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதியப்பட்டது போன்ற கருத்துகள் பரவுவதற்கு மாறாக, மாணவருடன் உல்லாசமாக இருக்க நினைத்த ஆசிரியை, மாணவனுக்கு செக்ஸி படங்கள் அனுப்பிய ஆசிரியை என்றே பலரும் கருத்துக்கள் பரப்பினார்கள். யார் ஒருவரும் மாணவனை பாலியல் ரீதியாக துன்புருத்திய ஆசிரியை என்று குறிப்பிடவே இல்லை.

ஸ்டீபனி பீட்டர்சன் அனுப்பிய கவர்ச்சி படங்கள் என்று கூட செய்திகள் வெளியாகின. ஒரு பெண் ஆசிரியை ஆண் மாணவனை பாலியல் குற்றத்திற்கு ஆலாக்கினால், செக்ஸி போட்டோஸ், வைரல் ஸ்காண்டல் என்று பெயரிடம் இவர்கள், ஒரு ஆண் ஆசிரியர் பெண் மாணவியை பாலியல் குற்றத்திற்கு ஆளாக்கினாலும் இதே தலைப்பை பயன்படுத்துவார்களா? பாலியல் குற்றத்தில் எங்கிருந்து வந்தது பாலின வேறுபாடு?

அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை சேர்ந்த சில பிரபலங்களும் கூட இத்தகைய வகையில் தாங்கள் பாதிக்கப்பட்டதை குறித்து பேசியுள்ளனர். லிட்டில் வெயின் என்பவர், அமெரிக்காவை சேர்ந்த ராப் இசை பாடகர். இவர் தனக்கு 11 வயது இருக்கும் போது 13 வயது பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தான் எதிர்க்க முயற்சித்தும், தன்னால் அந்த பெண்ணை தடுக்க முடியாமல் போனது என்று இவர் லிட்டில் வெயின் கூற, அதற்கு மறு கேள்வியாக ஒரு நிருபர், நீங்கள் த்ரீசம்மில் ஈடுபட்டுள்ளீர்களா? நீங்கள் படுக்கையில் சிறந்து செயல்படுவீர்களா? என்று கேள்வி கேட்டார்

வெயின் கூறிய தகவல் என்ன? அதற்கு இவர் கேட்ட எதிர் கேள்வி என்ன? ஒரு பிரபலம் இப்படியான தகவலை கூறினால், இதே கேள்விகள் அதே நிருபரிடம் இருந்து வெளிவருமா? வந்தால் தான் சமூக போராளிகள் சும்மா விடுவார்களா?

அவர் திருமணமானவர், இவரது நண்பரின் மனைவியே இவரை ஒரு பார்ட்டியின் போது உறங்க வைத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். மயக்க நிலையில் இருந்து தெளிந்த போதுதான், தன்னை ஓரல் செக்ஸ்ற்கு நண்பனின் மனைவி பயன்படுத்திக் கொண்டது இந்நபருக்கு அறிய வந்துள்ளது.

இப்படியான சம்பவம் நடந்துவிட்டது என்று மனைவி மற்றும் நண்பரிடம் அவர் விவரித்துலாளர். ஆனால், இவர் கூறியதை எதையும் ஏற்காத நண்பர்களும் மனைவியும், இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

தான் கற்பழிக்கப்பட்டதாக இந்த நபர் கூறியதை யாரும் கேட்கவே இல்லை. ஒரு தோழி மாறாக இவரை முகத்தில் அடித்துவிட்டு சென்றார் என்று அந்த நபர் கூறுவதை போல இணையத்தில் பரவி கிடக்கிறது அந்த கதை.

இந்த வழக்கிலும் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. சமந்தா ரே மியர்ஸ் தனது முன்னாள் காதலன் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். மேலும், இவர் தனது முன்னாள் காதலனை தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஆனால், காவலர்கள் சமந்தா மீது கற்பழிப்பு குற்ற வழக்கு பதியவே இல்லை.

சமந்தாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த எக்ஸ் காதலர் தான் காவலர்களுக்கும், அவசர உதவி எண்ணுக்கும் அழைத்து நடந்ததை கூறியுள்ளார். சமந்தா சில புகைப்படங்களை எடுத்து விட்டு, எக்ஸ் காதலனை கத்தியால் குத்திவிடுவேன் என்று கூறி மிரட்டியும் இருக்கிறார்.

மிரட்டல் மற்றும் தாக்குதலுக்காக மட்டுமே சமந்தா மீது வழக்கு பதியப்பட்டது. கற்பழிப்பு அல்லது, அவரை நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது குறித்து அவர் மீது எந்த ஒரு வழக்கும் பதியப்படவில்லை. வெளி வந்த கதைகள் இவ்வளவு என்றால், ஆண் என்பதால் வெளிய கூற இயலாது. கூறினால் நம்ப மாட்டார்கள் என்று மறைக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம். #MeToo மட்டுமல்ல, இங்கே #MenTooவும் இருக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*