நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கை

பிறப்பு : - இறப்பு :

இலங்கையைச் சூழ காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேகமூட்டமான நிலையும் மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு,வடமத்திய, வடமேல், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

அதேபோல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்ட காலநிலை நிலவக்கூடும்.

இந்நிலையில், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit