தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

பிறப்பு : - இறப்பு :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலனுக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்கான பாடசாலை தினத்தை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் ஊவா மாகாணத்திலும் தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை அதிபர்கள் சிலரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இது தொடர்பான அனுமதி மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் வழமைப் போன்று பாடசாலைகள் இடம்பெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம எமது செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit