மழைவீழ்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும்

பிறப்பு : - இறப்பு :

நாட்டின் தாழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக, எதிர்வரும் தினங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வடக்கு வடமத்திய, கிழக்கு,வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் மற்றும் கொழும்பு வரையானதும், ஹம்பாந்தொட்டை முதல் மட்டக்களப்பு வரையானதுமான கடற்பிரதேசங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, கடும் மழைக்காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit