அப்பிள் பிரியர்களே !! கவனம் ஏமாந்து விடாதீர்கள் !!

பிறப்பு : - இறப்பு :

நீங்கள் அப்பிள் உற்பத்தியில் அனைத்து பொருட்களையும் விரும்புகின்றீர்களா ? அப்படியாயின் தற்போது ஈ-பேயில் 260 டொலருக்கு விற்பனையாகும் அப்பிள் கைக்கடிகாரத்தையம் வாங்கிவிட்டிர்களா ?

வாடிக்கையாளர்களே !!
அந்த கைக்கடிகாரத்தை வாங்கிவிடாதீர்கள். அது போலியானது என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஈ.பேயில் விற்கப்பட்ட அந்த முதல் கடிகாரத்தை வாங்கிய நபர் தற்போது உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனாலும் இந்த கடிகாரததை விற்றவரோ அப்பிள் நிறுவனத்தில் வேலை செய்யும் தனது உறவினர் இந்த கடிகாரத்தை தந்ததாக கூறியுள்ளார்.

ஆயினும் இந்த போலி கடிகாரத்திற்கும் உண்மையான கடிகாரத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை காட்டும் படங்கள் உண்மை என்ன என்று காட்டுகின்றன. அப்பிளின் உற்பத்திகள் அனைத்தும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளன. அந்த வகையில் இந்த கைக்கடிகாரமும் பெரிய அளவில் எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் புதிய வரவை பாதிக்கும் அளவில், ஈ-பேயில் போலி கடிகார விற்பனை களை கட்டியது.

கடந்த செவ்வாய்கிழமை ஈ-பேயில் காணப்பட்ட இந்த கடிகாரம் சில மணி நேரத்தில் விற்பனையாகிவிட்டிருந்தது ஆனால் இணையத்தில் சேர்க்கப்பட்டிருந்த படங்கள் அனைத்தும் போலியானவை ஆகும். உண்மையான கடிகாரம் போன்றே திரை மற்றும் வர்ணங்களை பாவனையாளர் வி தெரிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் அப்பிள் போனுடன் – இந்த கடிகாரத்தை எவ்வாறு இணைத்து சிங்கிரணைஸ் செய்வது போன்ற தொழில்நுட்ப ரீதியில் பல தகவல்களும் இணைக்கப்பட்டிருந்தன.

இந்த அப்பிள் கைக்கடிகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit