இந்த வருடத்தில் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அதிகமாம்? யார் யார் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாருக்குத்தான் இல்லை ஆசைகள். எல்லாருக்கும் தான் வசதியாக வாழவேண்டும் தன் குடும்பத்தை சீரும் சிறப்புமாக நடத்தி, ஊரில், நாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாமல் பிரச்சனைகளும், கடன் தொல்லைகளும் கழுத்தை நெறிக்கின்றன. சரிதானே.. ஆனால் இந்த மூன்று நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு யோகம் இருக்கிறது. அவர்கள் நினைத்தால் ஓரிரு ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரராகிவிடுவார்களாம். அதற்காக செய்யவேண்டியவை பற்றி இந்த பதிவில் காண்போம்.

நட்சத்திரங்கள்

ஜோதிட சாஸ்திரங்களை நம்புபவர்களுக்கு பிறந்த நேர பலன்கள் குறித்து நம்பிக்கை இருக்கும். ஒருவரின் பிறந்த நேரத்தைப் பொறுத்து ஒரு நட்சத்திரத்தை கணக்கிட்டு அவருக்கு உரித்ததாக ஜோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதன்படி அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் கணிக்க முடியும் என்கிறார்கள்.

அப்படி 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் இந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் ஒரு யோகம் உள்ளது. அதுதான் அவர்களை ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக மாற்றும் யோகம்.

அஸ்வினி ஆலயம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு சென்றால், கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.

திருத்துறை பூண்டி, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இங்கு அமைந்துள்ள சிவன் கோவில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஆகும். இது அஸ்வினி நட்சத்திரத்துக்குரிய ஆலயம். அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யக்கூடிய கோயிலாகும்.

அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் சிவபெருமானை வழிபடுவதால், இவ்வாலயம் அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாக கருதப்படுகிறது. இங்கு அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபடுவதால், அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். மேலும் கோடீஸ்வர யோகம் அவர்களை ஒரு வருடத்துக்குள் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும்.

ஆயில்ய கோவில்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய கோவிலாக குறிப்பிடப்பட்டுள்ள கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சிவன் கோவில் ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருந்துதேவன்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள கற்கடேஸ்வரர் கோவில் தான் ஆயில்யம் நட்சத்திரத்துக்கான கோவில் ஆகும். இங்கு மட்டும் இந்த நட்சத்திரக்காரர்கள் சென்று வந்தால், போதும் அவர்கள் வாழ்வே தலைகீழாக மாறிவிடும்.

இந்த கோவிலில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை அருந்தி வந்தால் அனைத்து வித கிரக தோஷங்களும் நீங்கி, கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

அனுச கோவில்

நாகப்பட்டினம் மாவட்டம் திருநின்றவூரில் இருக்கும் இந்த கோவிலுக்கு அனுச நட்சத்திரக்காரர்கள் சென்று வந்தால் கோடீஸ்வரர் யோகம் கிடைக்கும்.

திருநின்றவூரில் அமைந்துள்ள மகாலட்சுமிபுரீஸ்வரர் கோவிலுக்கு அனுஷ நட்சத்திரக்காரர்கள் செல்லும் போது உடல் ஆரோக்யம் மேம்படும். பணவரவு அதிகமாகும். தொல்லைகள் விலகும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*