வெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எரிபொருள் விலையை மீள்பரிசீலனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் விலைச் சூத்திரம், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விலைச் சூத்திரத்தை வெளியிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான விலையானது, V1 + V2 + V3 + V4 என்ற சூத்திரத்திற்கு அமைய வகுக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, V1 எனப்படுவது இறக்குமதி செலவாகவும், V2 எனப்படுவது நடைமுறைச் செலவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

V3 எனப்படுவது நிர்வாக செலவாகவும், V4 எனப்படுவது வரிவிதிப்பாகவும் என நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்ட சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் லீற்றர் ஒன்றுக்கான அதிகூடிய விலை நிர்ணயிக்கப்படுவதாக நிதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

Fuel Pricing Formula: MRP = V1 + V2 + V3 + V4.
V1- Landed Cost (Rs./Litre)
V2- Processing Cost (Rs./litre)
V3- Administrative Cost (Rs./Litre)
V4- Taxation (Rs./Litre)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*