“செக்’ வைத்த ஸ்மிசெக்: தப்பினார் நடால்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில், தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால், தகுதிச் சுற்றில் இருந்து பிரதான சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்காவின் டிம் ஸ்மிசெக்கை நான்கு மணி நேரம் 12 நிமிட போராட்டத்துக்குப் பின் வீழ்த்தினார்.

ஐந்து செட் வரை நீண்ட இந்த ஆட்டத்தின் முடிவில் நடால், 6-2, 3-6, 6-7(2), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

மெல்போர்ன் பூங்காவில் உள்ள பிரதான மைதானமான ராட் லேவர் அரீனாவில் புதன்கிழமை இந்த ஆட்டம் நடைபெற்றது. முதல் செட்டை நடால் எளிதாக கைப்பற்ற இரண்டாவது செட்டை ஸ்மிசெக் கைப்பற்றி நடாலுக்கு செக் வைத்தார்.

டை பிரேக்கர் வரை நீண்ட மூன்றாவது செட்டை நடால் வசப்படுத்த, நான்காவது செட்டை ஸ்மிசெக் தனதாக்கினார். இதனால், ஆட்டம் ஐந்தாவது செட்டுக்கு நீண்டது. கடைசி செட்டில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் போராடினர். ஸ்மிசெக்கின் ஷாட்கள் ஒவ்வொன்றும் தகுதிச்சுற்று வீரனைப் போல அல்லாமல், பிரபல வீரர்களின் ஷாட்களைப் போல இருந்தது. அதற்கு அவர் வீசிய 15 ஏஸ் சர்வ்களே சாட்சி. தவிர, நடால்தான் நெருக்கடியுடன் ஆடினார். ஸ்மிசெக் ரிலாக்ஸாக ஆடியதால்தானோ என்னவோ, நேரம் செல்லச் செல்ல நடாலின் முகத்தில் கடுகடுப்பு தொற்றிக் கொண்டது. இருப்பினும், தனது அனுபவத்தின் மூலம் நடால், கடைசி செட்டை வசப்படுத்தி, தரையை முத்தமிட்டு வெற்றியைக் கொண்டாடினார்.

தோல்வி அடைந்தோம் என்பதை விட அற்புதமான ஆட்டத்தைக் கொடுத்தோம் என்ற திருப்தியுடன், தனது உடமைகளைக் கட்டிக் கொண்டு ஸ்மிசெக் ஓய்வு அறைக்குத் திரும்பும்போது, பின்னிருந்து நடால் கைதட்டி அவரது திறமையை அங்கீகரித்தார்.

முதல் செட் முடிந்தவுடன் சோர்வாக இருந்த நடால் தனது மருத்துவருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட தோல்வி அடையும் நிலையில் இருந்து மீண்டு வந்தது குறித்து நடால் கூறுகையில், “”கடந்த ஏழு மாதங்கள் போட்டிகளில் இருந்து விலகி இருந்ததாலோ என்னவோ, இது எனக்கு சவாலான நேரம். முதல் செட் முடிந்த பின் ஆட்டம் முழுவதுமே சோர்வாக இருந்தேன். இன்றைய இரவு எனக்கு சுகமாக இருக்காது’ என்றார்.

மற்றொரு ஆட்டத்தில், 17 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், இத்தாலியின் சைமன் போலெலியிடம் முதல் செட்டை இழந்தாலும், அடுத்த மூன்று செட்களை வசப்படுத்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் மரிங்கோ மடோசெவிச்சை எளிதில் தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் வீரர் நிக் கிர்ஜியாஸ், குரோஷியாவின் இவோ கர்லோவிச்சையும், மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் சாம் கிராஸ், சக வீரர் தனஸி கொக்கினாகிஸையும் வீழ்த்தினர்.

இருவருக்கும் உள்ளூர் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

முன்னணி வீரர், வீராங்கனைகளின் முடிவுகள்

வெற்றி பெற்றவர் தோல்வி அடைந்தவர் செட் விவரம்

தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு) ஜர்ஜென் மெல்ஸர் (ஆஸ்திரியா) 7-6(0), 6-2, 6-2

ஆன்டி முர்ரே (பிரிட்டன்) மடோசெவிச் (ஆஸ்திரேலியா) 6-1 6-3, 6-2

ஃபெடரர் (சுவிட்சர்லாந்து) சைமன் போலெலி (இத்தாலி) 3-6, 6-3, 6-2, 6-2

கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) லூகாஸ் (ஸ்லோவேகியா) 6-3, 6-7(10), 6-3, 6-3

மாலேக் ஜஸிரி (துனிஷியா) ரோஜர் வேஸ்லின் (பிரான்ஸ்) 1-6, 6-3,6-4, 1-6, 6-3

நடால் (ஸ்பெயின்) ஸ்மிசெக் (அமெரிக்கா) 6-2, 3-6, 6-7(2), 6-3, 7-5

மகளிர்

மரியா ஷரபோவா (ரஷியா) பனோவா (ரஷியா) 6-1, 4-6, 7-5

சாரா எரானி (இத்தாலி) ஃஎஸ்பினோசா (ஸ்பெயின்) 7-6(3), 6-3

பெளசார்டு (கனடா) பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 6-0, 6-3

சிமானோ ஹாலேப் (ருமேனியா) கஜ்டசோவா (ஆஸ்திரேலியா) 6-2, 6-2

ஷரபோவா வெற்றி

மகளிர் பிரிவில், ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற ரஷியாவின் மரியா ஷரபோவா, சக வீராங்கனையான அலெக்ஸாண்ட்ரா பனோவாவை எதிர் கொண்டார். இதில் ஷரபோவா போராடி வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் பெளசார்டு 6-0, 6-3 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை வீழ்த்தினார். வளர்ந்து வரும் வீராங்கனையான ருமேனியாவின் சிமானோ ஹோலப், ஆஸ்திரேலியாவின் ஜர்மிளா கஜ்டசோவாவைத் தோற்கடித்தார்.

சானியா, பயஸ் ஜோடி முன்னேற்றம்

மகளிருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா, சீன தைபேயின் சூ வெய் ஷே ஜோடி, ஆர்ஜெண்டினாவின் மரியா ஐரிஜோயன் ஜோடியை எதிர்கொண்டது. 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா – சூ வெய் ஷே ஜோடி 6-2, 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்றது. சானியா ஜோடி அடுத்த சுற்றில் கனடாவின் கேப்ரிலா, போலந்தின் அலிக்ஜா ரசோல்ஸ்கா ஜோடியை எதிர் கொள்கிறது.

ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், தென் ஆப்பிரிக்காவின் ராவென் கிளாசன் ஜோடி அமெரிக்காவின் ஸ்டாக் லிக்ஸ்கி, ராஜீவ் ராம் ஜோடியை சந்தித்தது. இதில் 6-4, 7-6(6) என்ற நேர் செட்களில் பயஸ், ராவென் ஜோடி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

அடுத்த சுற்றில் பயஸ், ராவென் ஜோடி இத்தாலியின் சைமன் போலெலி, ஃபேபியோ ஃபோக்னி ஜோடியுடன் ஆட உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit