பாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*