இந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேஷம்

வீரமும் விவேகமும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே… இந்த வாரமும் சூரியன் சஞ்சாரம் மறைவு ஸ்தானமான 6வது வீட்டில் உள்ளது. வார இறுதியில் 7ஆம் வீட்டிற்கு சூரியன் நகர்கிறார். நோய்கள் நீங்கும் கவலைகள் தீரும் விரோதிகள் தொந்தரவு இருக்காது. பணவரவு ஏற்படும். சந்திரனின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் கவனமாக இருக்கவும். செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வேலையில் சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். புதன் ஏழாமிடத்தில் இருப்பதால் கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளுடன் நல்ல உறவு ஏற்படும். குரு எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் கவலை வேண்டாம் குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். சுக்கிரன் ஏழாமிடத்தில் அமர்ந்திருப்பதால் காதல் உணர்வும், அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். சனி பகவான் சஞ்சாரத்தினால் வருமானம் அதிகரிக்கும், வெளிநாடு பயணம் செய்ய முயற்சி செய்யலாம். ராகுவின் 4ஆமிட சஞ்சாரத்தினால் புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கேதுவின் பத்தாமிட சஞ்சாரத்தினால் நன்மைகள் நடைபெறும். குருபகவானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும். 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

ரிஷபம்

காதல் உணர்வு அதிகம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. சூரியன் ஐந்தாமிட சஞ்சாரம் சுமாராக இருந்தாலும் வார இறுதியில் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். சந்திரனின் சஞ்சாரம் மனதில் உற்சாகத்தை தரும் என்றாலும் வார மத்தியில் குழப்பத்தையும் பின் நிம்மதியை ஏற்படுத்தும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருப்பதால் குல தெய்வக் கோயிலுக்கு சென்று வரலாம். புதன் ஆறாமிட சஞ்சாரம் நோய்களை வெளிப்படுத்தும் மருத்துவ செலவு செய்யுங்கள். குரு ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் நன்மைகள் நடைபெறும். நகை வாங்குவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தினால் சண்டை சச்சரவு வரலாம் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போகலாம். சனி பகவானால் வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சலும் கூடும். ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் பயணத்திலும் பாக்கெட்டிலும் கவனமாக இருக்கவும். கேது ஒன்பதாமிடத்தில் இருப்பதால் ஆலய தரிசனம் மன அமைதியை தரும். வெள்ளிக்கிழமை விஷ்ணு ஆலயத்திற்கு சென்று தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 14ஆம் தேதி காலை முதல் 16ஆம் தேதி வரை சந்திராஷ்டமம். மவுன விரதம் இருப்பது நல்லது. கோவிலுக்கு செல்லலாம்.

மிதுனம்

புத்திசாலித்தனம் கொண்ட கொண்ட மிதுன ராசிக்காரர்களே. சூரியன் சஞ்சாரத்தினால் நெருக்கடிகளை தவிடு பொடியாக்குவீர்ககள். சந்திரனின் சஞ்சாரம் வார இறுதியில் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருப்பதால் வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. ஐந்தாமிட புதன் புத்திசாலித்தனத்தை அதிகரிப்பார். பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் அறிவாற்றல் கூடும். குரு ஆறாமிடத்தில் இருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இதமாக பேசவும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் குறைந்தாலும் பணவரவு அதிகரிக்கும். சனி, ராகுவினால் செய்யும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். கேது எட்டாமிடத்தில் இருப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போதும் கவனமாக இருப்பது நல்லது. சிவாலய தரிசனம் நன்மையை ஏற்படுத்தும். 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது. கவனமாக இருக்கவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

கடகம்

மனோதிடம் கொண்ட கடக ராசிக்காரர்களே… இந்த வாரம் நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றிகிடைக்கும் காரணம் சூரியன், சந்திரன் சஞ்சாரம் உற்சாகத்தை எற்படுத்தும். செவ்வாய் சஞ்சாரத்தினால் அண்ணன், தம்பிகள் மத்தியில் பாசம் அதிகரிக்கும். புதன் பயணம் வாகன போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவார். குருவினால் நன்மைகள் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் வாரம் சொத்துக்களை பதிவு செய்யலாம். பணம் வந்தாலும் கூடவே சனி பகவான் சஞ்சாரத்தினால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ராகு கேது சஞ்சாரம் பற்றி கவலை வேண்டாம். குரு பார்வை நன்மை செய்யும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் பிறக்கும். அம்மாவை விட சிறந்த தெய்வம் இல்லை. அம்மாவை மகிழ்சியாக வைத்திருந்தாலே நன்மைகள் அதிகம் நடக்கும்.

சிம்மம்

நேர்மையும், வீரமும் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே… உங்கள் ராசிநாதன் சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். தொட்டது துலங்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் நோய்கள் எட்டிப்பார்க்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதன் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருப்பதால் உறவினர்களினால் நன்மைகள் ஏற்படும். அவர்களின் மனதை நோகடிக்க வேண்டாம். குரு சஞ்சாரத்தினால் அம்மாவின் ஆசியும் அன்பும் கிடைக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தடைபட்ட காரியம் முடியும். சனி பகவானால் இந்த வாரம் சிறு உல்லாச பயணம் செல்வீர்கள். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் எற்படும் தொல்லைகள் குறைய முழுமுதற்கடவுள் விநாயகரை வணங்குங்கள்.

கன்னி

அறிவாற்றல் கொண்ட கன்னி ராசிக்காரர்களே… சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் அரசாங்க வகையில் நன்மைகள் நடைபெறும் நேரம் வந்து விட்டது. சந்திரனின் சஞ்சாரத்தினால் முயற்சிகள் வெற்றியடையும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக பயணத்திற்கு சரியான வாரம் இது. ஆட்சி நாதன் புதன் இரண்டாம் வீட்டில் இருப்பதனால் பாக்கெட்டில் பயணம் நிறையும். குரு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் செய்யும் செயலில் சில தடங்கள் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருப்பதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனியின் நான்காமிட சஞ்சாரத்தினால் சொத்துக்கள் வாங்குவீர்கள். ராகு சஞ்சாரம் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவார். கேது ஐந்தாமிடத்தில் இருப்பதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் பணம் வரும். பெருமாளை வணங்க நன்மைகள் அதிகம் நடக்கும்.

துலாம்

குரு பெயர்ச்சியால் உற்சாகமடைந்துள்ள துலாம் ராசிக்காரர்களே சூரியன் விரைய ஸ்தானத்தில் சுப விரைய செலவுகள் ஏற்படும். சந்திரனின் சஞ்சாரத்தினால் வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் நலத்தின் மீது கண் வையுங்கள். புதன் ஜென்ம ராசியில் இருக்கிறார் வம்பு தும்புக்கு போக வேண்டாம். குரு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். தொழிலில் வருமானம் கூடுவதோடு பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை அதிகரிக்கும். சனியால் மனச்சஞ்சலம் இருந்தாலும் ராகுவினால் முயற்சிகள் வெற்றியடையும். கேது நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம், வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். பெருமாள் கோவிலுக்கு செல்வது நன்மை தரும்.

விருச்சிகம்

சூரியன் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பது நன்மை தரும். சந்திரனின் சஞ்சாரம் வார துவக்கத்தில் மனதில் லேசான குழப்பத்தை தரும் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இளைய சகோதரர்கள் உதவி கிடைக்கும். புதன் 12ஆம் வீட்டில் இருப்பதால் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வீண் விரைய செலவுகளை தவிர்க்கவும். குரு ஜென்ம ராசியில் இருப்பது நல்ல அம்சம் என்றாலும் இந்த வாரம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் பேசியே காரியத்தை சாதிப்பீர்கள். ராகுவின் சஞ்சாரத்தினால் வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். கேதுவினால் மூன்றாமிடத்தில் முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். முருகன் கோவிலுக்கு செவ்வாய்கிழமைகளில் சென்று விளக்கு போடலாம்.

தனுசு

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை செய்யும் இடத்தில் திறமைகள் பளிச்சிடும். சந்திரனின் சஞ்சாரம் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டிலும், வெளியிலும் பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. புதன், சுக்கிரன் 11ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழிலில் லாபமும் அதனால் பணவரவு அதிகரிக்கும். குருவின் சஞ்சாரத்தினால் சுப செலவுகள் ஏற்படும் அதற்கேற்ப பண வரவும் இருக்கும். சுக்கிரன் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பணியிடத்தில் அலைச்சலும் வேலையும் அதிகரிக்கும். ராகு, கேது சஞ்சாரத்தினால் ஏற்பாடும் பாதிப்பை தவிர்க்க வீண் பேச்சுக்களை குறைக்கவும். ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போட நன்மைகள் நடக்கும்.

மகரம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு சஞ்சாரத்தினால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது நன்மையைத் தரும். புதன், குரு பத்தாம் வீட்டில் இருப்பதால் பணியிடத்தில் புதிய உற்சாகம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செய்யும் விரைய செலவுகள் அதிகரிக்கும். ராகு, கேது சஞ்சாரத்தில் ஏற்படும் தடுமாற்றம், தொல்லைகளை தவிர்க்க அம்மன் கோவில்களுக்கு சென்று வணங்கலாம்.

கும்பம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வார இறுதியில் 9ஆம் இடத்திற்கு மாறுகிறார் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த காரியம் ஒன்று முடிவுக்கு வரும். சந்திரன் சஞ்சாரத்தினால் பணி செய்யும் இடத்தில் புது பொறுப்புகள் தேடி வரும், வார இறுதியில் வருமானமும், சுப செலவுகளும் ஏற்படும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும், வீடு, நிலம் வாங்குவது தொடர்பான செயல்களை செய்யலாம். புதன் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் வெளியூர் பயணம் நன்மையை ஏற்படுத்தும். குரு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் வேலையை சரியாக செய்தால் நல்ல பெயர் கிடைக்கும். மற்றவர்கள் வேலையில் தலையிட்டால் பாதிப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் விமானம் ஏற வழிவகுக்கும். வெளிநாடு செல்ல ஆசைப்படுவர்களுக்கு விசா கிடைக்கும். லாப சனி வருமானத்தை அதிகரிப்பார். ராகு, கேது சஞ்சாரத்தினால் உடலில் உற்சாகமும், சுறுசுறுப்பும் ஏற்படும். வெளியூர் பயணத்தினால் நன்மை கிடைக்கும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் நடக்கும்.

மீனம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பொருள் வரவு ஏற்படும். சந்திரன் சஞ்சாரத்தினால் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் தெளிவு பிறக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். மனவருத்தம் நீங்கும் உறவினர்கள் வருகையினால் வீடு களைகட்டும். புதன், சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும், உடல் நலனில் அக்கறை தேவை. சனி பத்தாமிடத்தில் இருக்கிறார் அலுவலகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிரக்கும். ராகு, கேது சஞ்சாரத்தினால் சிறு ஆன்மீக பயணம் செல்ல வேண்டியிருக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*