நிகழ்ச்சியில் பங்குபற்றும் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை செய்த தொகுப்பாளர்… அம்பலப்படுத்திய டிவி பிரபலம்

பிறப்பு : - இறப்பு :

பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் பாடகி சின்மயி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிலையில், சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் பணிபுரிந்த ரமேஷ் பிரபா மீது அதிரடி புகார் ஒன்றை கூறியுள்ளார்.

சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறினார் ரமேஷ் பிரபா. இதன் பின்னர், லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, சமையல் நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். இதனிடையே கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நிலையில், சன் டிவியில் இருந்து விலகி, கலைஞர் தொலைக்காட்சியின் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்றார். சுமார் 11 மாதங்கள் பொறுப்பேற்ற நடத்தி வந்த ரமேஷ் பிரபா பின்னர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் குற்றம் குறித்து புகார்கள் வெளியாகி வரும் நிலையில், பாடகி சின்மயி ரமேஷ் பிரபா குறித்து பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு வரும் சிறுமிகளிடம் ரமேஷ் பிரபா பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல ரமேஷ் பிரபாவின் பாலியல் சீண்டலுக்கு ஆளான அந்த தொலைக்காட்சி பிரபலம் தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்ததை தெளிவாக வெளியிட்டுள்ளார்.

அதில், பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் ஆடிஷனில் கலந்து கொள்வதற்காக, ரமேஷ் பிரபாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு எனது பர்பாமென்ஸ் பற்றியும் ஷோ மற்றும் ஷூட்டிங் எப்போது நடக்கும் என்பது பற்றி பேசுவதற்காக அழைத்தார். என்னுடைய பெற்றோர் அவருடைய அலுவலகத்துக்கு சென்று பார்த்து வருமாறு தெரிவித்ததை அடுத்து நானும் கற்பகம் கார்டனுக்கு சென்றேன்.

அப்பொது அங்கிருந்த ரமேஷ் பிரபா, நீங்கள் எந்த பாடல் பாடப்போகிறீர்கள் என கேட்டார். நானும், எழுதி வைத்திருந்த சில பாடல்களைச் சொன்னேன். எழுதி வைத்திருந்த நோட்டு புத்தகத்தை அவரிடம் காட்டினேன். உடனடியாக அவர் என்னை அருகில் வருமாறு அழைத்தார்.

பின்னர், எழுதிய பாடல்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கையை வைத்து பார்த்தார். திடீர் என எனது குர்தாவுக்கு அடியில் கையை விட்ட ரமேஷ் பிரபா மோசமான காரியங்களை செய்து என்னை டார்ச்சர் செய்தார். அவரது இந்த நடவடிக்கையால் நான் மொத்தமாக உடைந்து போனேன். அங்கிருந்து என்னால் நகர முடியைவில்லை. மேலும், தொடர்ந்து என்னை பாடு பாடு என்றும் கூறினார்.

அதன் பிறகு, என் நெஞ்சின் மீதும் அவர் கை வைத்தார். என்னை அழுத்தி பிடித்து முத்தமும் கொடுத்து அலுவலகத்துக்கு அழைத்தார். பின்னர், நிறைய நிகழ்ச்சிகளில் காம்பேரிங் செய்யவும் அனுமதித்தார் என சிறுமியாக இருந்து தற்போது பிரபல காம்பியராக உள்ள அந்த பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாகவும் ஆவேசமாகவும் தெரிவித்துள்ளார்.

பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் ரமேஷ் பிரபா போன்ற தொலைகாட்சி பிரபலங்கள் வாய்ப்பு கேட்டு வரும் சின்ன பெண்களை சீரழித்து வந்துள்ளது பழைய கதை மட்டுமல்ல மீடியாவில் அவரை தெரிந்தவர்களுக்கு நன்கு அறிந்த ஒன்று தான்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit