கோவில்கள் ஆயிரம் இருந்தாலும் இங்கு சென்றால்தான் குரு அள்ளிக் கொடுப்பாராம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் முக்கிய வழிபாட்டு விக்ரகம் சிவபெருமானுடையது ஆகும். சிவபெருமானை ஆபத்சகாயேஸ்வரராக இங்கு வழிபடுகின்றனர். சிவபெருமான் இங்கு சுயம்பு என்று அழைக்கப் படும் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். “களங்கமர் காத்த விநாயகர்” என விளங்கும் விநாயகப் பெருமான் மற்றும் குரு பகவான் அல்லது ப்ருஹஸ்பதி என விளங்கும் தட்சிணாமூர்த்தி. எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் போது குரு பகவானை வழிபட்டு வளம் பெறவும் கிரக நிலைகளினால் உண்டாகக் கூடிய தீமைகளில் இருந்து விடுபெறவும் பக்தர்கள் இக்கோயிலை மொய்க்கின்றனர். ஆயிரம் கோவில்கள் இருந்தாலும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு சென்றால்தான் குரு அள்ளிக் கொடுப்பாராம்! வாருங்கள் நடைதிறப்பு, பூசை நேரம் மற்றும் எப்படி செல்வது உட்பட அனைத்து தகவல்களையும் காண்போம்.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இது குருவுக்கான முதன்மை தளங்களுள் ஒன்றாகும்.

குரு பெயர்ச்சி சமயத்தில் மக்கள் குரு பகவானுக்காக சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். குரு பகவானுக்கு உகந்த நாள் வியாழன் ஆகும். எனவே சிறப்பு பூஜைகள் எல்லா வாரமும் வியாழன் அன்று செய்யப் படுகின்றன.

ஆலங்குடி என்ற இவ்விடத்தின் பெயர் ஒரு பழங்கதையிலிருந்து உருவானதாகும்.பாற்கடல் கடையப்படும் போது வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷத்தினால் தேவர்களின் முயற்சியானது தடை பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் சிவபெருமானிடம் ரட்சிக்குமாறு வழிபட்டனர். சிவபெருமான் உடனே அந்த கொடிய விஷத்தை குடித்ததால் ஆலங்குடி என்ற பெயர் இவ்விடத்திற்கு உருவானது.

இதன் மூலவரும் ஆபத்சஹாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் கஜமுகாசுரன் மூலம் பயங்கரமான அனுபவங்களை பெற்ற சமயத்தில் அவன் விநாயகப் பெருமானால் தோற்கடிக்கப் பட்டான். எனவே விநாயகர் இவ்விடத்தில் “களங்கமர் காத்த விநாயகர்” என்று வழிபடப்படுகிறார்.

பார்வதி தேவி சிவபெருமானிடம் திருமாங்கல்யதிற்காக தவமிருந்து பின்பு அவரையே மணம் முடித்ததால் இவ்விடம் “திருமண மங்களம்” என்ற பெயரிலும் புகழ் பெற்று விளங்குகிறது.

கும்பகோணத்திலிருந்து 19 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். தேசிய நெடுஞ்சாலை எண் 66ல் பயணித்தால் 30 லிருந்து 35 நிமிடங்களில் செல்லத் தகுந்த தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் பாதி தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் தினமும் நான்கு நேரங்களில் பூசை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு முதல் பூசை நடைபெறுகிறது. உச்சிகாலம் 12.30 முதல் 1 மணி வரை மதிய நேரத்தில் பூசை நடத்தப்படுகிறது. சாயங்காலம் 5 மணிக்கு தொடங்கும் பூசை 6 மணி வரை நடைபெறுகிறது. இரவில் 8.30 மணியிலிருந்து 9 மணி வரை பூசை நடத்தப்படுகிறது.

ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் மூலவர், இந்தப் புண்ணியத் தலத்தில் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் ஆவார். பார்வதி தேவி இங்கு ஏலவர்குழலி அல்லது உமை அம்மை என்று அழைக்கப்படுகிறார். முன்பொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முற்பட்டனர். அவர்கள் தேவாமிர்தத்தை பெறுவதற்காக வாசுகி என்ற தேவலோக பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது அந்தப் பாம்பு கக்கிய ஆலகால விஷத்தை , சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் காத்ததால் சிவபெருமான் ரட்சகர் என்று பொருள் படும் படி ஆபத்சகாயேஸ்வரர் என்று அன்போடு அழைக்கப் படுகிறார். இந்த இடமும் ஆலங்குடி என்று புகழ் பெற்றது.

குரு பகவானுக்கான நவக்ரஹ ஸ்தலமான ஆலங்குடிக்கு மிக அருகில் ஏனைய எட்டு நவக்கிரக ஸ்தலங்களான திருநள்ளாறு (சனி பகவான்), கஞ்சனூர் (சுக்கிரன்), சூரியனார் கோயில் (சூரியன்), திருவெண்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (ராகு), திங்களூர் (சந்திரன்), கீழ்பெரும்பள்ளம் (கேது) ஆகியவை அமைந்துள்ளன.

ஒரு ராசி சித்திரைத் திருவிழா, கார் திருவிழா, பங்குனி உத்திரம் உள்ள தாய் பூச மாதம் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன, பவுர்ணமியன்று சிறப்பு பூசைகள் நடைபெறும். கிரகங்களின் வழி வியாழன் கடந்து செல்லும் நாள் தெட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*