விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு தூபி அமைப்பதற்கு தடையுத்தரவு கோரிய மனு நிராகரிப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழிழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா-புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவாக வல்வெட்டித்துறையில் தூபி அமைப்பதற்கு தடையுத்தரவு கோரி காவற்துறையினரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை தீருவிலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை புனரமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகர சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய கடந்த 5 ஆம் திகதி அடிக்கல் நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது காவற்துறையினர் நீதிமன்றில் எதிர்ப்பு மனுவை முன்வைத்தனர்.

இதனையடுத்து இன்றையதினம் இதற்கான கட்டளையிடுவதற்காக நீதவான் வழக்கை ஒத்தி வைத்திருந்தார் இதற்கமைய இன்றையதினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த தீர்மானமானது பிரதேச சபையால் சட்டத்துக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அதனை இடைநிறுத்த முடியாது என்றும் நீதவான் தெரிவித்து, எதிர்ப்பு மனுவை நிராகரித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*