பயணத்தின்போது கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இந்த வார ராசி பலன்கள் 08.10.2018 முதல் 14.10.2018 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேஷம்:

தைரியம் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவங்க நீங்கதாங்க. இந்த வாரமும் சூரியன் சஞ்சாரம் மறைவு ஸ்தானமான 6வது வீட்டில் உள்ளது. அப்பாவிடம் அதிகம் பேசி பிரச்சினை செய்ய வேண்டாம். அமைதி காப்பது நல்லது. சந்திரனின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. அம்மாவின் அன்பு அதிகரிக்கும். மன தைரியமும் கூடும். செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நீங்கள் செய்யும் செயல்கள் எல்லாம் சிறப்படையும். சூரியனுடன் இருந்த புதன் ஏழாமிடத்திற்கு சுக்கிரனுடன் குடியேறுகிறார். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் தொழில் கூட்டாளிகளுடன் நல்ல உறவு ஏற்படும். குரு இந்த வாரம் எட்டாமிடத்திற்கு மாறுகிறார் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. சுக்கிரன் ஏழாமிடத்தில் அமர்ந்திருப்பதால் அழகுணர்ச்சி அதிகரிக்கும். சனியின் ஒன்பதாமிட சஞ்சாரம் நன்மை செய்யும், வருமானம் அதிகரிக்கும், வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம். ராகுவின் 4ஆம் இட அமர்வு புதிதாக வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை கொடுக்கும். கேதுவின் சஞ்சாரத்தினால் செய்யும் செயல்கள் எல்லாம் சிறப்படையும். சிவ ஆலய தரிசனம் நன்மையை தரும்.

ரிஷபம்

அழகு உணர்ச்சி கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. சூரியன் ஐந்தாமிட சஞ்சாரம் படிப்பில் கவனச்சிதறலை ஏற்படுத்தும். சந்திரனின் சஞ்சாரம் மனதில் தெம்பை ஏற்படுத்தும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருப்பதால் குல தெய்வக் கோயிலுக்கு வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு செல்வீர்கள். புதன் ஆறாமிடத்திற்கு மாறுவதால் தோல்நோய்கள் ஏற்படலாம். குரு ஆறாமிடத்தில் இருந்து ஏழாம் இடத்திற்கு மாறுவதால் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருப்பதால் வீட்டில் சண்டை சச்சரவை தவிர்க்கவும். சனி எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. கேது ஒன்பதாமிடத்தில் இருப்பதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வணங்கலாம்.

மிதுனம்

அறிவாற்றல் கொண்ட மிதுன ராசிக்காரர்களே. சூரியன் நான்காமிடத்து சஞ்சாரத்தினால் அப்பாவின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சந்திரனின் சஞ்சாரத்தினால் கவனம் அதிகரிக்கும் செவ்வாய் எட்டாமிடத்தில் இருப்பதால் அதிகம் கோபப்பட வேண்டாம். புதன் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் அறிவாற்றல் அதிகரிக்கும், கல்வியில் மேன்மை கூடும். குரு ஐந்தாமிடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு மாறுகிறார் குடும்பத்தில் குழந்தைகளால் மன சங்கடம் உண்டாகும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுது போக்கு விசயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சனி ஏழாமிடத்தில் இருக்கிறார் கூட்டு வியாபாரம் அதிகரிக்கும் லாபம் கிடைக்கும். ராகு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். கேது எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்வது நல்லது. குரு பகவான் தரிசனம் நன்மையை ஏற்படுத்தும்.

கடகம்:

கருணை உள்ளம் கொண்ட கடக ராசிக்காரர்களே சூரியன் மூன்றாமிடத்தில் இருப்பதால் முயற்சிகள் வெற்றியடையும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதன் நான்காம் வீட்டிற்கு மாறுகிறார் புதிதாக வண்டி வாகனம் வாங்கலாம். குரு ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் பெயரும் புகழும் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சனி ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆராக்கியத்தில் அக்கறை தேவை. ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருப்பதால் மனதில் குழப்பம் ஏற்படும். கேது ஏழாமிடத்தில் இருப்பதால் தம்பதிகளுக்கு இடையே சச்சரவு ஏற்படும். சந்திர தரிசனம் அம்மாவிடம் ஆசி பெறுவதும் நன்மையை ஏற்படுத்தும்.

சிம்மம்

வீரம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே… உங்கள் ராசிநாதன் சூரியன் இரண்டாமிடத்தின் சஞ்சாரத்தினால் வருமானம் அதிகரிக்கும் சம்பள உயர்வு கூடும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாகனம் ஒட்டும் போது கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு மாறுகிறார் தாய்மாமனால் நன்மைகள் ஏற்படும். குரு நான்காம் வீட்டிற்கு மாறுவதால் அம்மாவின் ஆதரவு கிடைக்கும் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை ஏற்படும். சனி ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாச பயணம் செல்வீர்கள். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும். சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம்.

கன்னி

புத்திசாலித்தனம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே… சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தலைமைப் பதவி கிடைக்கும் நேரம் வந்து விட்டது. சந்திரனின் சஞ்சாரத்தினால் பணவரவு அதிகரிக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். ஆட்சி நாதன் புதன் இரண்டாம் வீட்டிற்கு மாறுவதால் தரகு கமிஷன் மூலம் வருமானம் கிடைக்கும். குரு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணங்களினால் நன்மை ஏற்படும். சுக்கிரன் இரண்டாமிடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனியின் நான்காமிட சஞ்சாரத்தினால் விவசாய நிலம் வாங்குவீர்கள். ராகு பதினொன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கேது ஐந்தாமிடத்தில் இருப்பதால் பரம்பரை சொத்துகளை விற்பதன் மூலம் பணம் வரும். விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வணங்கலாம்.

துலாம்

சூரியன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். சந்திரனின் சஞ்சாரம் மனதில் உற்சாகத்தை அதிகரிக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். புதன் ஜென்ம ராசிக்கு மாறுவதால் இடம் பொருள் அறிந்து செயல்படுங்கள். குரு இரண்டாம் வீட்டிற்கு மாறுவதால் பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும். ராகு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும். கேது நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெருமாள் தரிசனம் நன்மைகளைத் தரும்.

விருச்சிகம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். சந்திரனின் சஞ்சாரம் நன்மைகளை ஏற்படுத்தும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்கள் உதவி செய்வார்கள். புதன் விரைய ஸ்தானத்திற்கு மாறுவதால் வீண் செலவுகளை தவிர்க்கவும். குரு ஜென்ம ராசிக்கு மாறுகிறார் சமூகத்தில் புகழும், கவுரமும் அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டிற்குத் தேவையான அழகு சாதனப் பொருட்களை வாங்குவீர்கள். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கவனம் தேவை. ராகு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியைத் தரும். கேது மூன்றாமிடத்தில் இருப்பதால் உடன் பிறப்புகளால் தொல்லைகள் ஏற்படும்.

தனுசு

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் பணவரவு அதிகரிக்கும். குரு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சுப விரைய செலவுகள் ஏற்படும். பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பணவருமானம் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேளைப்பளு அதிகரிக்கும். ராகு எட்டாமிடத்தில் இருக்கிறார் சிந்தனையில் குழப்பம் உண்டாகும். கேது இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சுகளை தவிர்க்கவும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் குழப்பமும் சிந்தனையில் தடுமாற்றமும் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், மௌன விரதம் இருப்பது சிறப்பு. ஆலய வழிபாடுகள் மற்றும் தான தர்மங்கள் மன அமைதியைக் கொடுக்கும்.

மகரம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. சந்திரனின் சஞ்சாரத்தினால் சில சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கவனம் தேவை. புதன் பத்தாம் வீட்டிற்கு மாறுவதால் வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் அதிகரிக்கும். குரு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் செய்யும் தொழிலில் லாபம் ஏற்படும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் பணியிடத்தில் அதிகாரியின் உதவி கிடைக்கும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செய்யும் செலவுகளில் கவனம் தேவை. ராகு ஏழாமிடத்தில் இருப்பதால் உறவினர்களால் தொல்லை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் தடுமாற்றம் உண்டாகும். விநாயகரை வணங்கலாம் நன்மைகள் நடக்கும். அக்டோபர் 5 ஆம் தேதி இரவு 7 மணி முதல் 7-10-2018 இரவு 8.51 வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை, மவுன விரதம் இருக்கலாம். ஆலய தரிசனம் செய்வது நல்லது.

கும்பம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் சச்சரவை தவிர்த்தால் சங்கடங்களில் இருந்து தப்பலாம். சந்திரன் சஞ்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பை அம்மாவை வணங்கலாம். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் வெளியூர் பயணம் நன்மையை ஏற்படுத்தும். குரு பத்தாம் வீட்டிற்கு மாறுவதால் சொந்த தொழில் சிறப்படையும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். சனி பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வருமானம் அதிகரிக்கும். ராகு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பு அதிகரிக்கும். கேது பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணத்தினால் நன்மை ஏற்படும். சனிக்கிழமை சனிபகவானுக்கு எள் தீபம் போடவும். அக்டோபர் 7 ஆம் தேதி இரவு 8.51 மணி முதல் 9-10-2018 இரவு 11.29 வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை, மவுன விரதம் இருக்கலாம். ஆலய தரிசனம் செய்வது நல்லது.

மீனம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். சந்திரனால் மனதில் தெளிவு ஏற்படும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். புதன் எட்டாம் வீட்டிற்கு மாறுகிறார் தாய்மாமனுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குரு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் அப்பாவின் தொழிலில் லாபம் கிடைக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். சனி பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். ராகு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும். அக்டோபர் 9 ஆம் தேதி இரவு 11.29 மணி முதல் 12-10-2018 காலை 4.34 வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை, மவுன விரதம் இருக்கலாம். ஆலய தரிசனம் செய்வது நல்லது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*