தண்ணீர், உருளைக்கிழங்கு, பாம்பு எல்லாம் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? இன்னும் நிறைய இருக்கு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நமக்கு வரும் கனவு என்பது எப்போதுமே சில சூட்சமங்களை கொண்டதாகவே இருக்கிறதல்லவா? கனவுகளிலும் அதில் வரும் குறியீடுகள் மற்றும் அர்த்தங்களில் தான் எவ்வளவு குழப்பங்கள்.

கனவுகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கங்களைக் கொடுத்து நம்மைக் குழப்பி விடுகிறார்கள். ஆனால் நம்முடைய கனவில் வரும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் உண்மையான அர்த்தங்கள் தான் என்ன? இப்போது பார்க்கலாம்.

உங்களுடைய கனவில் வானவில் வந்தால் உங்களுடைய குடும்பத்துக்கு நல்ல விஷயங்கள் வரப் போகின்றன. நன்மைகள் உண்டாகும். நல்ல எதிர்காலம் தேடி வரும் என்று அர்த்தம்.

கனவில் குதிரை வந்தால், இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தொல்லைகள் நீங்குவதற்கான ஒரு அறிகுறி. நீங்கள் குதிரையில் சவாரி செய்வது போன்ற கனவு வந்தால், நீங்கள் பல தடைகளையும் தாண்டி, வெற்றிகளை நோக்கிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

கனவில் பாம்பு கடிப்பது போல் வந்தால் உங்களுக்கு அமோக பண வரவு உண்டாகப் போகிறது என்று அர்த்தம்.

கனவில் நீங்கள் கையில் ஏதாவது நெருப்பை வைத்திருப்பது போலவோ அல்லது நெருப்பைச் சுற்றியோ இருப்பது போல் வந்தாலோ அல்லது, மாமரம், நல்ல கனிந்த மாம்பழத்தைப் பார்த்தல் அல்லது சாப்பிடுதல் போன்று கனவு வருவது, மாதும்பழம் கனவில் வருவது, பால் குடிப்பது, எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை பார்ப்பது, யானையைப் பார்ப்பது அல்லது யானைச் சவாரி செய்வது போன்ற கனவுகள் வந்தால் நீங்கள் செல்வந்தராக மாறப் போகிறீர்கள். பணம் கை நிறைய சேரப் போகிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் கோவிலுக்குப் போவது போலவோ கோவில் கோபுரமோ கனவில் வந்தால் உங்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கப் போகிறது என்று அர்த்தம்.

பொதுவாக மனித உடல் கனவில் வந்தால் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் குழந்தை கனவில் வந்தால் தொழிலில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அதேபோல் காதலில் அதிருப்தியும் எந்த உதவியுமின்றி தொழிலில் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

சூரியனோ அல்லது சந்திரனோ உதிப்பது போல் கனவில் வந்தால், உங்களுடைய குடும்பம் மகிழ்ச்சியாகவும் செல்வச் செழிப்புடன் இருப்பதோடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்குவார்கள் என்று பொருள்.

உங்களுடைய கனவில் நீங்கள் நல்ல நவ நாகரீகமான புது ஆடைகள் அணிந்து கொள்வது போன்று இருந்தால், எதிர்காலமும் அதேபோல் பிரகாசமாக இருக்கும். அதுவே ஆடையை துவைப்பது போலவோ உலர வைப்பது போலவோ தோன்றினால், உங்கள் வாழ்க்கையில் மிகச் சிறந்த திருப்பங்கள் உண்டாகின்றன என்று அர்த்தம். உங்களுடைய ஆடை அழுக்காக இருப்பது போல கனவில் வந்தால், உங்களுடைய மனைவி மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவருக்கு உங்களைவிட வேறு விஷயங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது என்றும் அர்த்தம்.

முயலின் மீது ஏறி சவாரி செய்வது, பட்டாம்பூச்சிகளைப் பார்ப்பது, அழகான இளம்பெண் கனவில் வருவது, வெற்றிலை பாக்கு புாடுவது, பனிச்சருக்கை பார்ப்பது, மீன்களைப் பார்த்தல், குழந்தைகள் பற்றி சிந்திப்பது போல் கனவு வருவது, மோதிரத்தைப் பார்ப்பது, தேங்காயை கையில் வைத்திருப்பது, பிங்க் கலர் பொருட்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று உங்கள் கனவில் வந்தாலும் அது திருமணம் கைகூடி வருவதற்கான சமிக்கையைக் குறிப்பதாக இருக்கிறது.

கனவில் தண்ணீர் இருப்பது போல் வருவது உங்களுடைய பொருளாதார தன்னிறைவைக் குறிக்கும். தண்ணீர் நிரம்பி வழிவது போல் கனவு வந்தால், பண மழை பொழியப் போகிறது உங்களுக்கு என்று அர்த்தம். நீங்கள் தண்ணீர் குடிப்பது போல கனவு வந்தால், வெளியில் சென்ற பணமெல்லாம் திரும்ப உங்களிடம் வருகிறது என்று அர்த்தம். தண்ணீரில் நீங்கள் நடப்பது போல் கனவில் வந்தால், உங்களுடைய கனவுகள் அனைத்தும் பெரிதாக வெற்றியடையப் போகின்றன என்று அர்த்தம்.

நல்ல செழிப்பான மரம் கனவில் வந்தால் அது உங்களுடைய மகிழ்ச்சியைக் குறிக்கும். அதுவே முறிந்த மரமாக இருந்தால், உங்களுடைய மகிழ்ச்சியின்மையையும் வறுமையையும் குறிக்கின்ற குறியீடாகும். மரத்தில் உள்ள இலைகள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சளாக மாறுவது போல் கனவு வந்தால், நோய்வாய்ப்படும் வாய்ப்பு இருப்பதாக அறிகுறி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*