தமிழக அளவில் ட்ரெண்ட் ஆகிவரும் கள்ளக் காதல்… அதற்காக இப்படியெல்லாமா செய்வாங்க

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலைபாதையோரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது விசாரணையில் தெரியவந்தது. கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே அழுகிய நிலையில் கழுத்தறுக்கப்பட்ட ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் இறந்தவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது சபீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து முகம்மது சபீரின் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது கள்ளக்காதலன் ஆசிப்புடன் சேர்ந்து கணவரை கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில் முகம்மது சபீருக்கும் பர்தோஷுக்கும் திருமணமாகி மூன்று மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில் பர்தோஷுக்கு ஓலா கார் ஓட்டுநர் ஆசிப்புடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது எனது கணவருக்கு தெரிந்தால் இருவரையும் பிரித்து விடுவார் என பர்தோஷ் அச்சமடைந்துள்ளார்.

இதையடுத்து கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருந்ததை அடுத்து அவரை தீர்த்து கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லலாம் என சபீரை கடந்த 14-ஆம் தேதி அழைத்து சென்றார் பர்தோஷ்.

பர்தோஷ், சபீர், மூன்று மாத குழந்தை ஆகியோர் ஆசிப்பின் காரிலேயே சென்றனர். அப்போது முகம்மது சமீரை காரில் வைத்து இருவரும் கொலை செய்துவிட்டு சடலத்தை டம்டம் பாறை அருகே வீசிவிட்டனர்.

இதையடுத்து நேராக மங்களூரில் உள்ள வீட்டுக்கு சென்று குழந்தையை விட்டுவிட்டு 60 சவரன் நகை மற்றும் பணத்துடன் ஆசிப்புடன் பர்தோஷ் சென்றுவிட்டார் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதையடுத்து தேவதானப்பட்டி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள பர்தோஷ், கள்ளக்காதலன் ஆசிப் ஆகியோரை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்று விட்டு 3 மாத குழந்தையை நிர்கதியாய் வீட்டில் விட்டுவிட்டு தாய் கள்ளக்காதலனுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*