உன் புருஷன் செத்து போய்ருவான் என பெண்ணை ஏமாற்றி பூஜை… இறுதியில் கொலை செய்து நகைகளுடன் தப்பிய போலி சாமியார்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எவ்வளவுதான் பட்டாலும் போலி சாமியார்களை நம்பி கற்பையும், நகை, பொருட்களையும் தொலைக்கும் பெண்கள் கடைசியில் உயிரையும் இழக்கும் ஆபத்திற்கு ஆளாகிவிட்டனர். புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக். இவர் ஒரு கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகி 3 வயதில் ஜெயஸ்ரீ என்ற குழந்தையும், 2 வயதில் ஜெயகணேஷ் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் போன 19-ம் தேதி கோயிலுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற ஜெயஸ்ரீ வீட்டுக்கு வரவே இல்லை.

இதனால் அசோக் மனைவியை காணவில்லையே என்று எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்தார். அப்போது கரிக்கலாம்பாக்கம்-பாகூர் சாலையில் இருக்கும் ஒரு காளி கோயிலுக்கு அருகே ஜெயஸ்ரீ சடலமாக கிடந்தார். எப்படி தெரியுமா? கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. அவர் உடுத்திய சிவப்பு நிற சேலையால் கைகள் கட்டப்பட்டிருந்தது. தலை நிறைய பூ வைத்தபடி கவிழ்ந்தபடி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். கழுத்தில், காதில் கிடந்த தங்க நகைகள் அபேஸ் ஆகி இருந்தன.

தகவலறிந்து வந்த போலீசார் துரித நடவடிக்கையில் விசாரணைக்கு இறங்கினர். எப்படி கொலை செய்யப்பட்டிருப்பார் என போலீசார் தடயங்களை சேகரிக்க தொடங்கினர். அப்போது ஜெயஸ்ரீ-க்கு அருகில் எலுமிச்சை, குங்குமம் கிடந்தன. இதைபார்த்ததும் போலீசார் ஜெயஸ்ரீ ஒருவேளை நரபலி செய்யப்பட்டிருப்பாரோ என ஊகித்தனர். இருந்தாலும் அசோக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயஸ்ரீ மிகவும் கடவுள் பக்தி உடையவர் என தெரியவந்தது. அதோடு, பக்கத்து வீட்டில் ஒரு சாமியார் இருக்கிறார் என்றும், அவரது பெயர் கோவிந்தராஜ் என்றும் அசோக் சொன்னார்.

இதையடுத்து சாமியாரை பிடித்த போலீசார் துருவி துருவி விசாரணையை மேற்கொண்டனர். அந்தவிசாரணையில் பல்வேறு தகவல்களை போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது, அசோக்கின் தங்கை திலகத்திற்கு தோஷம் இருப்பதாக சொல்லி அவர்களை நம்பவைத்து குடும்பத்தில் பழக ஆரம்பித்திருக்கிறார் கோவிந்தராஜ். இவருக்கு வயது 46. வீட்டில் பில்லி சூனியம் உள்ளது என்று சொல்லி அதையும் சரி செய்வது போல பாவ்லா பண்ணியிருக்கிறார். இதை வைத்தே நிறைய பணத்தையும் கறந்துள்ளார். ஒரு கட்டத்தில் கோவிந்தராஜ் எது சொன்னாலும் நம்புவது, சொல்லும் கோயில்களுக்கெல்லாம் போவது, பூஜைகள் செய்வது என்று கண்மூடித்தனமாக இருந்திருக்கிறார்கள்.

கடைசியாக கோவிந்தராஜ் கிருஷ்ணவேணியிடம் தன் வேலையை காட்டினார். “உன் புருஷன் உன்னை விட்டுட்டு போய்டுவான். இல்லாட்டி அவன் உயிருக்கும் ஆபத்து வந்துடும். அப்படி அவன் போகாமல் இருக்கணும்னா, உயிரோட இருக்கணும்னா, உடனடியாக உனக்கு தோஷம் கழிக்கணும். அதனால உன் வீட்ல புது நகை ஏதாவது இருந்தா அதை எடுத்துட்டு வா, அதை வச்சி பூஜை செஞ்சா உன் புருஷன் உன்னைவிட்டு ஓடிப்போக மாட்டார்.” என்று சொல்லியிருக்கிறார்.

எங்கே புருஷன் தன்னை விட்டு போய்விடுவாரோ என்ற பயத்தில் கிருஷ்ணவேணியும் வீட்டில் கிடந்த 5 பவுன் நகையை எடுத்து கொண்டு, கோவிந்தராஜ் சொன்ன காளி கோயிலுக்கு போய் இருக்கிறார். அதாவது 20-ம் தேதி இரவு 8.30 மணிக்கு குளித்து முடித்து பூ வைத்து கொண்டு கிளம்பி இருக்கிறார். அங்கு தயாராக இருந்த கோவிந்தராஜ், கிருஷ்ணவேணியை “கிழக்கு பக்கம் பார்த்து உட்கார்ந்துக்கோம்மா, உன் கையில் இந்த எலுமிச்சம் பழத்தை கொடுத்து கெட்டியாக பிடிச்சிக்கோம்மா “என்று சொல்லி இருக்கிறார். பின்னர் சேலையால் அவரது கைகளையும் கட்டியிருக்கிறார். “கண்ணை மூடி செத்துப்போன உன் மாமனாரை வேண்டிக்கோம்மா” என்று சொல்லி இருக்கிறார்.

கிருஷ்ணவேணி கண்ணை மூடியதுதான் தாமதம், தயாராக வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணவேணி கழுத்தை கொடூரமாக அறுத்தார் போலி சாமியார். நொடிப்பொழுதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து பிணமாக விழுந்தார் கிருஷ்ணவேணி. பிறகு கோவிந்தராஜ், சாவகாசமாக பெண்ணின் கழுத்து, காதில் கிடந்த நகைகள் உட்பட அந்த 5 சவரனையும் சேர்த்து எடுத்து கொண்டு கமுக்கமாக ஒன்னும் தெரியாததுபோல் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த விஷயங்கள் அனைத்தையும் கோவிந்தராஜ் போலீசாரிடம் கக்கி இருக்கிறார். இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படி போலி சாமியார்களை நம்பி பெண்கள் தங்களை அழித்து கொள்வார்களோ? எத்தனை சொன்னாலும் போலிகளை நம்பும்கூட்டம் பெருகி கொண்டுதான் வருகிறது. மக்கள் மூடநம்பிக்கையை தகர்த்தெறிந்தால் ஒழிய இந்த போலிகளை ஒழிக்கவே முடியாது!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*