டிரைவருடன் ஓடிய பெண்… மோகம் தீர்ந்ததும் காணாமற்போன கள்ளக்காதலன்… இறுதியில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

குமாரபாளையம் அருகே கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் அவர் மோசடி செய்து ஏமாற்றியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை பீளமேட்டை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பார்வதி. இவருக்கு வயது 46. இவர் கணவர், மகள் என குடும்பத்துடன் வசித்து வந்தார். பார்வதியின் மகளுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் பார்வதிக்கு தங்கள் வீட்டில் டிரைவராக வேலைபார்த்து வந்த 42 வயது ஈஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இது அரசல்புரசலாக கணவருக்கு தெரிய வரவே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார் பார்வதி. கள்ளக்காதலர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

ஈஸ்வரனுடன் கள்ளக்காதல் மஜாவில் திளைத்த பார்வதி தன் பெயரில் இருந்த ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்று தனது கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்துள்ளார்.

கள்ளக்காதலன் ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பார்வதி மீதான மோகம் தீர்ந்ததால் ஈஸ்வரன் அவரை விட்டு விலகியுள்ளார்.

ஒரு கட்டத்தில் பார்வதியின் வீட்டிற்கே செல்லாமல் இருந்துள்ளார் கள்ளக்காதலன் ஈஸ்வரன். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி ஈஸ்வரனின் வீட்டிற்கு சென்று தன்னிடம் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால் பணத்தை திருப்பி தர மறுத்த ஈஸ்வரன் மனைவி மல்லிகா மற்றும் மைத்துனர் ஜம்புவுடன் சேர்ந்து மிரட்டியுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பார்வதி கடந்த 8ஆம் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து குமாரப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையறிந்த ஈஸ்வரன் தனது குடும்பத்துடன் வந்து பார்வதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சல் மற்றும் விரக்திக்கு ஆளான பார்வதி கடந்த 19ஆம் தேதி மாலை குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு முன்பு திடீரென உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீக்குளித்தார்.

இதனைக்கண்ட போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடலில் பற்றிய தீயை அணைத்து ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

கட்டிய கணவனை விட்டுவிட்டு கார் டிரைவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் வீட்டை விட்டு ஓடி வந்த பார்வதி மானம், மரியாதை மற்றும் பணத்தை இழந்ததோடு தற்போது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*