தமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்

பிறப்பு : - இறப்பு :

இரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று முச்சக்கரவண்டிகளில் வந்த 15 பேருக்கும் அதிகமானோர் இவ்வாறு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளவர், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை மேற்கொள்பவர்களை கைது செய்யுமாறு காவற்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரத்தில் உள்ள நீர்தாங்கி மீது ஏறி அண்மையில் அவர் போராட்டம் நடத்தி இருந்தார்.

இந்தநிலையில், நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத சிலர் குறித்த இளைஞரை கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி வீதியில் விட்டுச்சென்றனர்.

இதனை அடுத்து, அவர் பிரதேச மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

குறித்த கொலை, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது பிள்ளைகளால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit