விரட்டி விரட்டி பெண்ணை முத்தமிட்ட கல்லூரி நிர்வாகி… வீடியோ வெளியானதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கோவையில் எஸ்என்எஸ் கல்லூரியில் அதன் நிர்வாக இயக்குநர் மீது 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். கோவையில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியின் நிர்வாக இயக்குநராக உள்ளவர் சுப்பிரமணியன் (64). இவர் 23 வயது இளம் பெண் கவிதாவுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் புகார் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தெரியாமல் அந்த பெண்ணே ரகசியமாக கேமராவை வைத்து அந்த வீடியோ ஆதாரத்துடன் சுப்பிரமணியன் மீது துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த பெண்ணை ஓடி பிடித்து சுப்பரமணி சில்மிஷம் செய்யும் வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிர்வாக இயக்குநர் மகனும், கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நளினிடம், கூறியபோது வெளிநாட்டில் பெண்களை கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது மிகப்பெரிய விஷயம் அல்ல.

அதனால் போய் வேலையைப் பாருங்கள் இல்லையென்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட கவிதா தனது நண்பர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார்.

நண்பர்களின் அறிவுரைப்படி நிர்வாக இயக்குனரின் பாலியல் தொந்தரவுகளை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட ரகசிய கேமராக்கள் மூலம் அவரது சில்மிஷங்களை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் பணியை விட்டு நிறுத்தியதுடன் பல்வேறு வகைகளில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளது.

இதனால் உயிருக்கு பயந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பாலியல் தொந்தரவு கொடுத்த நிர்வாக இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவையை அடுத்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*