விஜயகலாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்

பிறப்பு : - இறப்பு :

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

விடுதலைபுலிகளின் மீள் உருவாக்கம் குறித்து விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தாம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்ததாகவும் அதன் படி சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit