12 ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் கொடூரமான தீய குணங்கள் இருக்கும்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில பொதுவான குணநலன்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். ஏனெனில் மனிதனாய் பிறந்த அனைவருக்குமே நல்ல குணமும், தீய குணமும் சேர்ந்தே இருக்கும். ஆனால் நாம்தான் அதனை ஒத்துக்கொள்வதில்லை.

இரண்டு குணங்களும் இணைந்து இருந்தால்தான் வாழ்க்கையை சுமூகமாக வாழ முடியும், ஏனெனில் உங்களுக்கு ஒருவர் தீமை செய்யும்போதும் நீங்கள் நல்லகுணம்தான் முக்கியம் என நினைத்தால் ஆபத்து உங்களுக்குத்தான். சில சமயம் உங்களிடம் உள்ள தீய குணங்கள் கூட உங்களுக்கு ஏதேனும் ஒரு நன்மையை செய்யலாம். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன தீயகுணங்கள் இருக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

உங்களிடம் இருக்கும் தீய குணம் கோபமாகும். உங்களின் முன்கோபத்தையும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதையும் பலரும் தவறாக புரிந்துகொள்ளலாம். உங்களுடைய வலுவான ஆளுமையை பலரும் பாராட்டுவார்கள் ஆனால் எங்கு கோபப்பட வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களிடம் இருக்கும் முக்கிய குணம் பிடிவாதம். சிலசமயம் உங்கள் மீதே தவறு இருந்தாலும் அதனை ஒப்புக்கொள்ள உங்கள் மனம் சம்மதிக்காது. இதனால் நீங்கள் பலவற்றை இழக்க நேரிடலாம். உங்களை நீங்கள் மன்னிக்க வேண்டிய முதல் ஆள் நீங்கள்தான்.

மிதுனம்

உங்களின் தீய குணம் முடிவெடுக்க இயலாமல் திணறுவதுதான். ஏனெனில் உங்கள் முடிவு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஒருநாள் ஒரு முடிவில் இருப்பீர்கள், மறுநாள் உங்கள் முடிவு முற்றிலும் வேறாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை உங்களிடம் இருக்கும். எது சரி என்ற பயமும் உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

கடகம்

உங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினையே உங்களுடைய பாதுகாப்பற்ற உணர்வுதான். இது உங்களின் அனைத்து உறவுகளையும் சிதைக்கக்கூடும். நீங்கள் செய்யும் தவறுகளை மற்றவர்கள் கண்டுபிடிக்கவிட்டாலும், அதைப்பற்றிய உங்களின் கவலையே உங்களை காட்டிக்கொடுத்துவிடும். உங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது உங்கள் கைகளில்தான் உள்ளது.

சிம்மம்

உங்களுக்கு இருக்கும் பிரச்சினையே உங்களுடைய அகந்தைதான். அதனால் நீங்கள் பல முக்கியமான நபர்களை உங்கள் வாழ்வில் இழக்க நேரிடலாம். மற்றவர்களிடம் பணிவாய் இருக்க கற்றுக்கொள்வது ஒன்றும் அவ்வளவு மோசமான செயல் அல்ல. திமிர் இருக்க வேண்டியது அவசியம்தான் ஆனால் தான் என்று திமிர் இருக்கக்கூடாது.

கன்னி

உங்களுடைய பிரச்சினை சிக்கலான மனநிலை ஆகும். உங்களிடமே நீங்கள் மிகவும் கடினமாக நடந்து கொள்வீர்கள், பிறகு மற்றவர்களிடம் எப்படி இனிமையாக இருக்க முடியும். வெற்றி உங்கள் வழியில் வந்தாலும், அது சரியாக இருக்காதோ என்ற எண்ணத்தில் அதனை விட்டுவிடுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை விரும்பிக்கொண்டுதான் இருப்பார்கள் அவர்களை உங்கள் மனநிலையால் விரட்டிவிடாதீர்கள்.

துலாம்

உங்களின் பிரச்சினை அடிமையாகுதல். உங்களை அடிமைப்படுத்துவது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் மது, சிகரெட், போதை பொருட்கள் ஏன் அன்பு கூட உங்களை அடிமைப்படுத்தும். ஒருமுறை ஏதேனும் ஒன்றிற்கு அடிமையாவிட்டால் அதிலிருந்து நீங்கள் வெளிவருவது கடினம். அடிமையாக இருப்பதில் தவறில்லை, ஆனால் அது ஆரோக்கியமான ஒன்றிற்கு இருக்க வேண்டும்.

விருச்சிகம்

உங்களுடைய பெரிய பிரச்சினை பொறாமை ஆகும். ” இக்கரைக்கு அக்கறை பச்சை ” என்ற பழமொழி உங்களுக்காவே கூறப்பட்டது. ஏனெனில் உங்களிடம் இருப்பது சிறந்ததாகவே இருந்தாலும் மற்றவர்கள் வைத்திருப்பது அதைவிட சிறந்ததோ என்ற எண்ணம் உங்களுக்குள் எழும். உங்களுடைய இந்த மனப்போக்கை மாற்றுவது மிகவும் கடினமான ஒன்று.

தனுசு

நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு தவறான வாக்குறுதிகள் கொடுப்பது. நீங்கள் பெரும்பாலும் நல்ல விஷயங்களையே கூறுவீர்கள் ஆனால் அதனை அனைத்து நேரங்களிலும் கடைபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு சிறந்தவராய் இருக்க வேண்டுமென விரும்புவீர்கள் ஆனால் அதனை செய்வது என்பது உங்களால் இயலாது. எனவே முடிந்தளவு வாக்குறுதிகள் கொடுப்பதை தவிருங்கள், ஏனெனில் இது உங்கள் நம்பகத்தன்மையை பாதிக்கும்.

மகரம்

நீங்கள் செய்யும் தவறு என்னவெனில் அவசரப்பட்டு அவர்கள் அப்படித்தான் என்று தீர்மானித்து விடுவது. பார்த்த மாத்திரத்திலியே ஒருவரை கணிப்பது என்பது தவறான ஒன்று. இது மற்றவர்களை உங்களை வெறுக்க வைக்கும். உங்களை போலவே இருபவர்களுடன்தான் பழகவேண்டும் நெல்லை நீங்கள் நினைத்தால் அது தவறான ஒன்று. வித்தியாசமாக இருப்பது ஒன்றும் தவறில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கும்பம்

உங்களின் நம்பிக்கையை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று, ஏனெனில் நீங்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டிர்கள். ஒருவகையில் இது நல்லதாக இருந்தாலும் பல நல்லவர்களை நீங்கள் இதனால் இழக்க நேரிடும். உங்களை முதலில் நம்புங்கள். நீங்கள் மற்றவர்களை நம்புவது உங்களை பலவீனமனவர்களை காட்டப்போவதில்லை.

மீனம்

சந்தேகப்படுவதே உங்களுடைய மிகப்பெரிய பிரச்சினையாகும். இது உங்கள் உறவுகளை பாதிக்கும். உங்களிடமே உங்களை நிறைய கேள்விகளை கேட்கவைக்கும், மற்றவர்களிடமும்தான். இதுவே உங்களை தனியாளாக நிற்க வைத்துவிடும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*