காதலனே காதலியை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை… யார் உடந்தை? வைரல் ஆகும் வீடியோ (வீடியோ இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாலியல் கொடுமைகள் பற்றிய செய்திகள் தினமும் அதிகரித்த வண்ணம் இருக்கிற நிலையில், தற்பொழுது சமூக வலைத்தளத்தில் இன்னொரு கொடூர செயலின் வீடியோ பதிவு வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

காவல் துறை அதிகாரியின் மகன், தான் காதலித்த பெண்ணை கண்முடித் தனமாகத் தாக்கிய வீடியோ பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற அனைத்துச் சமூக வலைதங்களிலும் வைரல் ஆகி வருகிறது.

தில்லி போலீஸ் அதிகாரி மகன் ரோஹித் டோமர், தான் காதலித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்திருக்கிறார். இத்துடன் அந்தப் பெண்ணை தாக்கி அதை வீடியோ பதிவு செய்து அவரை மிரட்டியதற்கவவும் தனி வழக்குப் பதிவு செய்யப்ட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னரே ரோஹித் உடன் அவர் காதலிக்கு பிரிவு ஏற்பட்டிருக்கிறது. ரோஹித் காதலியின் தோழி கூறுகையில், ரோஹித் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான், ஆனால் அவள் மறுத்துவிட்டபின் அவளைத் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் ரோஹித் இன் அச்சுறுத்தல் தாங்காமல், ரோஹித் இன் தந்தை ஆனா அசோக் டோமர் ஐ சென்று சந்தித்து நிலவரத்தை எடுத்துக் கூறி இருக்கிறார் ரோஹித் இன் காதலி. ஆனால் அசோக்கும் அவரின் மகனைப் போலவே இந்த அப்பெண்ணை மிரட்டி இருக்கிறார். ஆத்திரம் அடைந்த அப்பெண் இந்த நிலை நீடித்தால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யட்டும் என்று அசோக்கிடம் சொல்லிவிட்டார்.

ஆத்திரம் அடைந்த ரோஹித், தன் காதலியை உத்தர் நகரில் உள்ள தனது பிபிஓ அலுவலகத்திற்கு மிரட்டி வரவைத்து தன்னை கண்டிப்பா திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தத் துவங்கி ஒரு கட்டத்தில் தாக்கத் துவங்கிவிட்டார்.

தாக்கப் பட்ட பெண் திலக் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் செப்டம்பர் 11 அன்று ரோகித் தனது வீட்டிற்கு வந்ததாகவும், அவருடன் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வலைத்தளத்தில் பரவவிடப்போவதாக மிரட்டுவதாகவும் முன்னாள் காதலி கூறியுள்ளார்.

தற்பொழுது இந்திய தண்டனைச் சட்டம் 354, 326 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் ரோஹித் தோமர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அசோக் தோமர் IPC பிரிவு 506 கீழ் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*