திருமணம் முடிக்க வந்த ஆசிரியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வவுனியாவில் சம்பவம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

marriage

மூன்றாவது முறையாகவும் திருமணம் செய்துக்கொள்ள முயன்ற நபரொருவர் வசமாக சிக்கிக்கொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

38 வயதுடைய குறித்த நபருக்கும் கல்மடு பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணுக்கும் இன்று திருமணம் இடம்பெறவிருந்தது.

இதன்போது , ஆலயத்தில் திருமண சடங்குகள் இடம்பெற்றிருந்த போது அங்கு அவரது முதலாவது மனைவி தனது இரு பிள்ளைகளுடன் வந்துள்ள நிலையில் ,  அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் , திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதுடன் மூன்று தரப்பினரும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள காவல்நிலையம் சென்றுள்ளனர்.

இதன்போது , முதலாவது திருமணத்தில் இருந்து தான் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுள்ளதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டதாகவும் அவரிடம் இருந்து பிரிந்துள்ளதாகவும ்தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , இந்த பிரச்சினைக்கு மத்தியில் இன்று திருமணம் செய்துக்கொள்ளவிருந்த மணமகள் குறித்த திருமணத்தை நிறுத்தி உறவினருடன் புறப்பட்டு சென்றுள்ளார்.

குறித்த நபர் பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit