முதலாளியின் கள்ளக் காதலால் வந்த வினை… எங்கள் குழந்தையை புதைத்தோம் என கதறி அழுத நடிகர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தனது மனைவியின் கரு கலைந்ததற்கு அவரின் முதலாளியின் கள்ளக் காதலே காரணம் என்று டிவி நடிகர் சுமீத் சச்தேவ் தெரிவித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சுமீத் சச்தேவ். கர்ப்பமாக இருந்த அவரின் மனைவி அம்ரிதா குஜ்ராலுக்கு கரு கலைந்துவிட்டது. இந்த சம்பவத்திற்கு அம்ரிதாவின் முதலாளி தான் காரணம் என்கிறார் சுமீத். இது குறித்து சுமீத் கூறியதாவது,

கர்ப்பமாக இருந்த அம்ரிதா பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர் விடுப்பு கேட்டிருந்தும் அவரின் முதலாளி அவரை வேலைக்கு வருமாறு கட்டாயப்படுத்தினார். முதல் மூன்று மாதங்கள் அவர் வீட்டில் இருந்தே வேலை செய்தார். திடீர் என்று அவரின் முதலாளி எங்கள் வீட்டிற்கு வந்து இனியும் நீங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதிக்க முடியாது என்றார்.

அம்ரிதா கடந்த மாதம் 1ம் தேதி முதல் அலுவலகத்திற்கு சென்றார். அலுவலகத்திற்கு சென்ற அம்ரிதாவை கோவாவுக்கு வருமாறு அவரின் முதலாளி பிரகலாத் அத்வானி கூறினார். அம்ரிதா கோவா சென்ற போது வார இறுதி நாட்களில் கூட வேலை பார்க்க வைத்துள்ளார். பிரகலாத்துக்கும் அம்ரிதாவுக்கு தெரிந்த பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளது.

பிரகலாதின் கள்ளக்காதலி அவரை பிரிய முடிவு செய்துள்ளார். இதையடுத்து அம்ரிதாவை கோவாவுக்கு வரவழைத்து அந்த பெண்ணை சமாதானம் செய்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு பிரகலாத் கூறியுள்ளார். அதற்கு அம்ரிதா மறுத்துவிட்டார். இந்நிலையில் பிரகலாத்தின் கள்ளத் தொடர்பு குறித்து அவரின் மனைவிக்கு தெரிந்துவிட்டது. பிரகலாத்தின் கள்ளத் தொடர்பு பற்றி தெரிந்தும் தன்னிடம் கூறவில்லை என்று அவரின் மனைவி அம்ரிதா மீது கோபப்பட்டார்.

கோவாவில் இருந்து திரும்பி வந்த பிறகு அம்ரிதாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். வீடு திரும்பிய பிறகு அம்ரிதாவின் வேலை போனது தெரிய வந்தது. இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்த நிறுவனம் இப்படி செய்துவிட்டதே என்று அவர் வருத்தப்பட்டு அழுதார். சிறிது நேரத்தில் அவரின் கரு கலைந்துவிட்டது. நாங்கள் எங்கள் மகனை ஒரு தொட்டிலில் போட்டு புதைத்தோம். அம்ரிதாவின் கரு கலைய காரணமாக இருந்த பிரகலாத் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் சுமீத்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*