காதலி மரணம்… 9 நாள் கழித்து காதலனுக்கு நேர்ந்த சோகம்… அந்த ஒரு எண்ணால் நடந்த விபரீதம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தஞ்சாவூர் மாவட்டத்தில் காதலி தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாங்கமுடியாமல் காதலனும் தற்கொலை செய்துகொண்டார்,

எம்காம் படித்து வரும் ஜெயஸ்ரீ, விக்னேஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

காதலர்கள் என்பதால் வழக்கம்போல இவர்கள் வெளியில் செல்வது வழக்கம்.

இருவரும் செப்டம்பர் 2 ஆம் திகதி தஞ்சை நெய்வாசல் நத்தம்படி பாலம் கல்லணை கால்வாய் பகுதியில் நின்று பேசிகொண்டு இருந்தனர்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. திடீரென விக்னேஷ் கன்னத்தில் அறைந்த ஜெயஸ்ரீ, திடீரென கல்லனை கால்வாயில் குதித்துள்ளார். அதில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவரை இழுத்து சென்றது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஜெயஸ்ரீயை மீட்பதற்காக அவரும் ஆற்றில் குதித்தார். அவரும் தண்ணீரில் நீந்த முடியாமல் தத்தளித்தார். இதனை அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் பார்த்து கால்வாயில் குதித்து விக்னேசை மீட்டனர். ஆனால் ஜெயஸ்ரீயை மீட்க முடியவில்லை.

ஜெயஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்தபோது, அதில் பெயர் குறிப்பிடாமல் இருந்த ஒரு எண் இருந்தது. இந்த எண் யாருடையது என்று கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திடீரென்று தன்னை அறைந்துவிட்டு கால்வாயில் குதித்துவிட்டதாக விக்னேஷ் கூறியுள்ளார்.

இதையடுத்து 2 நாட்கள் கழித்து ஜெயஸ்ரீயின் உடல் தஞ்சை அருகே துறையூர் பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தஞ்சை பொலிசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

காதலி தற்கொலை செய்த கொண்ட நாளில் இருந்து விக்னேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று விக்னேஷ், தான் காதலி சென்ற இடத்திற்கே தானும் செல்வது என்று முடிவு செய்து விஷம் குடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*