இலங்கையை உலுக்கிய கோர சம்பவம் (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் தொடரூந்து முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இரவு வெலிகந்த பகுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து முன்னால் பாய்ந்தே அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

40 வயதான தந்தையும், அவரது 5 மற்றும் 11 வயதான மகன்களுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் மனைவி 5 மாதங்களுக்கு முன்னர் தனது 18 வயதான மூத்த மகனுடன் வேலை வாய்ப்பிற்காக கொழும்பிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருமாறு கோரி நேற்றைய தினம் குறித்த நபர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் காவல்துறை அந்த பெண்ணிடம் தொலைபேசி ஊடாக அழைத்து உரையாடிய போது, இன்னும் சில மாதங்களில் வீட்டுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளுடன் நேற்று இரவு தொடரூந்து முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

train_dead_001 train_dead_002

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*