யாழில் அட்டகாசங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

arrest

யாழ்ப்பாணம், நவாலி அட்டகிரி பகுதியில் நான்கு வீடுகளுக்கு தாக்குதல் மேற்கொண்டும் ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஒன்றை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பிலும் நால்வர் நேற்று (09) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு வீடுகளை தாக்கி வீட்டில் உள்ளவர்களை மிரட்டிய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதியை சேர்ந்த 18 இற்கும் 19 வயதிற்கும் உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit