கூட்டமைப்பை வழிநடத்துபவர்கள் சுயநலவாதிகளே… விக்னேஸ்வரன் காட்டம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மக்களின் தேவைகளையும், அபிலாசைகளையும் புரிந்துக் கொள்ளத்தவறிய சுயநலம் கொண்ட சிலரே தமிழ் தேசிய கூட்டமைப்பை வழிநடத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்ட கொள்கைகளை கொண்ட அமைப்பல்ல என்னும் அது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியும் அல்லவென்றும், அதில் மக்களின் பங்குபற்றுதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களிலும், தேவைகளிலும் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகியே உள்ளது.

தமிழ் மக்களின் உண்மையான அரசியல் நிலைமையை, புரிந்துக் கொள்ளும் நிலையில் இல்லாத, தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடர்ந்தும் ஆதரித்தால் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளில் இருந்தும் சறுக்க நேரிடும் என விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

எனவே, ஒரு கட்சியினால் மக்கள் பதவிகளுக்கு தெரிந்தெடுக்கப்படுவது முக்கியமா? அல்லது தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்கள் திடமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு பெறுமதியான கருத்துக்களை வெளிப்படுத்துவது முக்கியமா என்பதை தீர்மானிக்க வேண்டும் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிப்பட்ட நலன்களை பெற்றுக் கொள்வதற்காக அரசியல் மௌனம் காத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் நலன்களையும் வெளிப்படுத்துவதை தவிர்க்க முயற்சிப்பதை தடுப்பதற்கு வாக்குகள் பிளவுப்படுவதில் பிழை இல்லை என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு தரப்பு மோதலால் ஏற்படும் பிளவில் தமிழ் மக்கள் பாரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்களநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட கருத்து மோதல், தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளை சிதைக்கும் வகையில் அமையும் என எமது செய்தி சேவையினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*