ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் தமிழர்கள் தொடர்பில் நாளை முக்கிய தீர்மானம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

rajiv

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் சிறைதண்டனை அனுபவித்துவரும் ஏழுபேரையும் விடுவிப்பது குறித்து தமிழக அமைச்சரவை நாளை கூடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், தமிழக அராசங்கம் அவர்களை விடுவிப்பதற்கு உள்ள சட்ட வலு தொடர்பில் இந்திய சட்ட வல்லுனர்கள் தங்களது சார்பிலான வாதங்களை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்ட வல்லுனர் ஒருவர், குறித்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அவர் அதனை சட்டப்படியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறின்றி அந்த பரிந்துரையை நிராகரிப்பதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை எனவும், மத்திய அரசாங்கத்திடம் கருத்து கோர வேண்டிய அவசியமும் ஆளுநருக்கு இல்லையென்றும், 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசிற்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,  தமிழக அமைச்சரவை பரிந்துரைத்தாலும், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதாக தெரிவித்த சட்ட வல்லுனர் ஒருவர்,
அது அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்பதால் ஆளுனர் இது குறித்து மத்திய அரசிடம் ஒப்புதல் கோரலாம் என்றும், அவ்வாறு ஒப்புதல் கோரக்கூடாது எனக் கூறுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விடயம் மீண்டும் மத்திய அரசின் அமைச்சரவைக்கே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழக அரசாங்கத்தின் பரிந்துரையை ஆளுனர் நிராகரிக்க முடியாதென்றும், நிச்சயம் ஏற்றாக வேண்டும் என்றும் இந்த விடயத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசுக்கே அதிகளவான அதிகாரங்கள் உள்ளதாகவும் சட்ட வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit