பிரபாகரனின் மனைவி மகள் கொல்லப்பட்டது எப்படி? புதிய தகவலை வெளியிட்ட சரத் பொன்சேகா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 ஆயிரம் உறுப்பினர்களை இராணுவம் கொன்றதாக முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளை சேர்ந்த 23 ஆயிரம் உறுப்பினர்களை இராணுவத்தினர் கொன்றனர். மேலும் 12 ஆயிரம் உறுப்பினர்களை கைது செய்தோம்.

போர் நடைபெற்ற இறுதி வரையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் செயற்பட்டது. பாதிக்கப்படும் நபர்களை இந்த பக்கம் கொண்டு வர அவர்களின் கப்பலும் இயங்கியது.

போரின் இறுதி இரண்டு வாரங்கள் வரை அந்த கப்பல் இயக்கப்பட்டது. எனினும் 30 ஆயிரம் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அப்போதும் தகவல் வரவில்லை. அப்படி பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால், புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி பிரதேசங்களில் தோண்டும் இடங்களில் எல்லாம் எலும்பு கூடுகள் இருக்க வேண்டும். எனினும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

சாதாரண மக்கள், புலிகளின் பதுங்கு குழிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாங்கள் கைது செய்தவர்களில் ஒரு பெண் இருந்தார். அவர் ஒரு ஆசிரியை. விடுதலைப் புலிகளால், அந்த ஆசிரியை மற்றும் மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டு, மன்னாரில் அவர்கள் பதுங்குகுழியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால், 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பொதுமக்கள் இறந்திருக்கலாம்.

40 ஆயிரம் என்ற எண்ணிக்கை பொய்யானது. அவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இறந்து போயிருந்தால், முன்னோக்கி சென்ற எமக்கு அந்த சடலங்களை அப்புறப்படுத்த தனியான சேவையை ஏற்படுத்த நேரிட்டிருக்கும். எனினும் அப்படியான நிலைமை இருக்கவில்லை.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பாதுகாப்பு குறித்து எங்களுடன் அதிகமாக கலந்துரையாடினர். அதற்கு பின்னர் என்னுடன் பாதுகாப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான போரில் 23 ஆயிரம் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனரா? அல்லது இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டார்களாக என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பொன்சேகா, இறுதிக்கட்டப் போரில் 23 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பில் சுமார் 35 ஆயிரம் பேர் இருப்பதாகவே எமக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன. புலிகளின் வானொலி தொடர்புகள் மூலம் தினமும் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை நாங்கள் புலனாய்வு பிரிவினர் ஊடாக பெற்றுக்கொள்வோம்.

தினமும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 23 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்னர். இறுதி போர் இரண்டு வருடங்கள் 9 மாதங்கள் வரை நடைபெற்றன. இந்த காலத்திலேயே 23 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட புலிகளின் உறுப்பினர்கள், அந்த அமைப்பில் குறுகிய கால பயிற்சிகளை பெற்றவர்கள். இவர்கள் பொல்லுகளை வைத்து கொண்டு பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

முதியோருக்கும் புலிகள் பயிற்சிகளை வழங்கியிருந்தனர். இறுதிக்கட்டத்தில் புலிகள் அனைவருக்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.

பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் முன்னரங்கு பகுதிகளில் போரில் ஈடுபட்டே கொல்லப்பட்டுள்ளதாக எமக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்தன. இதனால், புலிகள் அனைவரையும் தமது தேவைக்கு பயன்படுத்தினர் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன் என அமைச்சர் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*