விக்னேஸ்வரன் ஒரு இனவாதியா? வட மாகாண ஆளுநர் தெரிவித்த கருத்து

பிறப்பு : - இறப்பு :

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வட்டு இந்துக் கல்லூரியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் இனவாதி அல்ல.

அதனால்தான் அவர் தமது புதல்வர்களை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார் என வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், விக்கினேஸ்வரன் ஏன் தமிழ் காவல்துறையினரை பாதுகாப்பிற்கு வைத்திருக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் பெரும்பான்மையின காவல்துறையினர் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்.

அவ்வாறு நம்பிக்கையை பெரும்பான்மையின காவல்துறையினர் மீது வைத்துக்கொண்டு வெளியே வேறு கதை பேசுகின்றார் என்று றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலம் நெருங்கும்போது இனவாதம் மொழிவாதம் குலவாதம் பேசுகிறார்கள்.

அவை தேர்தல் காலத்தில் மட்டுமேதான் என வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit