கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மகவெவ – குடாவெவதெனிய பிரதேசத்தில் கத்தியால் குத்தி ஒருவரை கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி இவோன் பெர்ணான்டோ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அதே பிரதேசத்தை சேர்நத மாரசிங்க ஆரச்சிகே என்ற நபருக்கே இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் மகவெவ, தெனிய பிரதேசத்தில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றம் சுமத்தப்பட்டு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*