
“மக்கள் சக்தி கொழும்பிற்கு” எதிர்ப்பு பேரணியால் மக்களுக்கு பாதிப்பு ஏறபட்டிருந்தால் தாம் மன்னிப்பு கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
தாமக்கு மாற்று வழி இல்லை என்பதுடன், நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதை அரசாங்கத்திற்கு உணர்த்தவே இந்த பேரணி இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தமது தலைவர்களை ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.