விரைவில் விவசாயத்தில் புதிய புரட்சி… அங்கஜன் ராமநாதன்

பிறப்பு : - இறப்பு :

தேசிய மற்றும் மாகாண ரீதியாக விவசாய கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நவீன கொள்கை திட்டங்களுடன், விவசாய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து, இளவாலை,உரும்பிராய் போன்ற பகுதிகளில் விவசாய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நவீன கொள்கை திட்டங்களை உள்ளீர்த்து விவசாயிகளுக்கு தொழில் நுட்ப மற்றும் சிறந்த சந்தை வாய்ப்புக்களை உலக வங்கியின் செயற்திட்டத்தின் மூலம் சாத்தியமாக்கலாம் என தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட கால போக செய்கைகளையும் ,நமது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உற்பத்திகளின் அதிகரிப்பை ஏற்படுத்துவதன் மூலம் இறக்குமதி வலுவை விட ,அதிகரித்த வலுவான அறுவடை இலக்கு இலாபத்தை விவசாய உற்பத்தியாளர்கள் அடைந்து கொள்ள முடியும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்

உருளைக்கிழங்கு, மற்றும் பெரிய வெங்காயம் போன்றவற்றிற்கு நிலையான வரிவிதிப்பை போன்று ஏனைய சில பயிர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு, விவசாய அமைச்சருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை விவசாயிகளின் செய்கை பயிர்களாக காணப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம், நெல், மிளகாய், சோளம், பீன்ஸ் போன்ற ஆறு பயிர்களுக்கு காப்புறுதி வழங்கப்பட்டிருந்தமையையும் குறிப்பிட்டிருந்ததோடு ,வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் கரவெட்டியில் காப்புறுதி கோவைகள் முடிவுற்று, நாடளாவிய ரீதியில் முதலாவதாக காப்புறுதியை வழங்கப்பட்டமையையும் இதன்போது பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit