12 ராசிகளிலும் பிறந்த கடவுள்கள் ராசியினருக்கு என்ன தருகிறார்கள் தெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

rasi_gods

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்குமே தன்னுடைய நட்சத்திரத்திற்குரிய கடவுள் யார், அந்தக் கடவுளிற்கும் நட்சத்திரத்திற்கும் உரிய தொடர்பு தான் என்ன ?, அவரை வழிபடுவதன் மூலம் எம்மாதிரியான சிறப்புகளை பெற முடியும் என்ற கேள்விகள் என்றாவது ஒரு நாள், ஏதோனும் ஒரு சூழ்நிலையில் தோன்றியிருக்கும். அவர்களுக்கான பதிவே இது. உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய கடவுள் யார், எங்கே உள்ளார் ? அவரை வழிபடுவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என அறிய ஆலயம் நோக்கி பயணிக்கலாம் வாங்க.

திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில் அமைந்துள்ளது கல்விக்கு அதிபதியாகத் திகழும் ஸ்ரீ சரஸ்வதி அம்மன் கோவில். கல்விக்கு மட்டுமின்றி இராசியில் முதலாவதான மேஷம் இராசிக்குரிய கடவுளும் இவரே. ஆயக்கலைகளான அறுபத்தி நான்கையும், கற்று தேர்ச்சியடைந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார். இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்ததாக புராணக் கதைகள் மூலம் அறியலாம். சரஸ்வதி அம்மையாரே இத்தலத்தை தேர்வு செய்து தவம் புரிந்ததால் இத்தலம் அமைந்துள்ள பகுதி அம்பாள் புரி என அழைக்கப்படுகிறது. அமேஷம் இராசியில் பிறந்த ஒவ்வொருவரம் தன் வாழ்நாளில் ஒருமறையேனும் இத்தலத்திற்கு பயணம் செய்ய வேண்டும்.

ரிஷப ராசிக்கு உரிய கடவுளாக இருப்பவர் ஸ்ரீ துர்கா தேவி அம்மன். இவர் குடிகொண்டுள்ள தலங்களிலேயே சிறப்பு பெற்றது இராஜராஜ சோழன் வழிபட்ட அம்மன்குடி கோவிலாகும். இத்தல இறைவன் மகிஷாசுரனை வதம் செய்யும் போது அவன் மார்பில் அணிந்திருந்த சிவலிங்கத்தின் மீது சூலம் பட்டதால் துர்கை அம்மனுக்கு தோஷம் ஏற்பட்டது. இதனால், இத்தலத்தில் ஈசான்ய மூலையில் இருக்கும் குளத்தில் நிராடி தோஷம் நிவர்த்தி செய்ததாக தொன்நம்பிக்கை உள்ளது. மேலும், இங்குள்ள துர்க்கை நவக்கிரகங்களுக்கு அதிபதியாய் விளங்குவதால் ரிஷப இராசி உடையோர் இங்கே வழிபடுவதன் மூலம் பாவங்களில் இருந்து விமோட்சனம் பெறலாம்.

திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அடுத்துள்ள எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகன் கோவில் மிதுனம் ராசி உடையோரின் அதிபதியாகும். அறுபடை முருகன் வீடுகளைத் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்றாகும். இத்தலத்தின் வரலாறு சோழர் காலம் வரை நிண்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகன் குறித்து பாடியுள்ளார். எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.

கடக ராசியில் நட்சத்திரத்தின் அதிபதியாக திகழ்பவர் ஸ்ரீ கிருண்ண பெருமான். வடஇந்தியாவில் பாண்டுரங்கனாக வழிபடக்கூடிய இவருக்கு தமிழகத்தில் இதே திருநாமத்தில் ஒரு சிலக் கோவில்களே உள்ளன. அவற்றுள் ஒன்று கும்பகோணம் அடுத்துள்ள கோவிந்தபுரத்தில் உள்ள திருத்தலம். கடக ராசியில் பிறந்தோர் தங்களுடைய பிறந்த தினத்தில் இத்தல பசுக்களுக்கு பால் பிரசாதம் தருவதன் மூலம் நோய் நொடியற்ற இனிமையான வாழ்நாட்களைப் பெறுவர் என்பது இத்தல நம்பிக்கையாக உள்ளது.

கடலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேசுவரர் சிவபெருமான் கோவில். இத்தல மூலவர் சிம்ம ராசியின் அதிபதியாக உள்ளார். இக்கோவிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டியதாக கூறப்படுகிறது.

கன்னி ராசிக்காரர்கள் கட்டாயம் கட்டாயம் சென்று வழிபட வேண்டிய தலம் திருநெல்வேலி மாவட்டம், வானரமுட்டி அடுத்துள்ள கழுகுமலை கருட பகவான் திருக்கோவிலாகும். இத்திருக்கோவிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோவில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோவில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் காணப்படுகிறார்.

இராமேஷ்வரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவில் இராமாயண காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் இராமேஸ்வரம் ராமர் கோவிலும் ஒன்று. ஜாதகத்தில் பித்ரு தோசம் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தலத்திற்கு வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். துலாம் ராசியில் பிறந்தோர் இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் தொழில் முன்னேற்றமும், செல்வாக்கும் அதிகரிக்கும்.

விருச்சிகம் ராசியில் பிறந்தோர் வழிபட வேண்டியக் கடவுள் ஆதிசேஷன் ஆகும். ஆதிசேஷனுக்கு என தமிழகத்தில் தனியே கோவில் அறிது என்றாலும் சென்னிமலை கவுண்டிச்சிபாளையத்தில் ஸ்ரீபுற்று நாக அம்மன் கோவிலில் ஆதிசேஷன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ஆதி சேஷன் என்னும் நாகத்தின் மீது தான், நாராயணன் பள்ளி கொண்டுள்ளார். இத்தல இறைவனை வழிபடுவதன் மூலம் ராகு, கேது, நாக தோஷங்களுக்கு நிவர்த்தி உண்டாகும். குறிப்பாக, விருச்சிக ராசி உடையோர் கட்டாயம் தரிக்க வேண்டிய தலம் இது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். சூரிய பகவானுக்காக அர்ப்பனிக்கப்பட்டுள்ள இத்தல மூலவரான சிவபெருமானுக்கு சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை படரச் செய்து பூஜிப்பது வழக்கம். தனுசு ராசிக்காரர்கள் தனது பிறந்த தினத்தில் அதிகாலை இத்தல மூலவரையும், சூரிய பகவானையும் ஒருசேர வழிபடுவதன் மூலம் வாழ்நாளிற்கான முத்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மதுரையில் இருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்தல மூலவரை மகர ராசிக்காரர்கள் வழிபடுவதன்மூலம் பித்ரு தோஷம் நீங்கி செல்வம் பெருகும் என்பது இத்தல நம்பிக்கையாக உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்திற்கு மரக ராசிக்காரர்கள் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று தரிக்க வேண்டும்.

கும்ப ராசிக்காரர்கள் சென்று வழிபட வேண்டிய திருத்தலம் மல்லிகார்ஜூனேசுவரர் கோவிலாகும். தர்மபுரியில் அமைந்துள்ள இத்தல மூலவரான மல்லிகார்ஜூனேசுவரரைக் காட்டிலும், தாய்மையின் சிறப்பை போற்றும் வகையில் காமாட்சி அம்மையாரின் திரு உருவம் உயரமாக காட்சியளிக்கிறது. மேலும், சுமார் மூன்று டன் எடையுள்ள இரண்டு தொங்கும் தூண்கள் இந்த சிவத்தலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுருளிமலையில் அருள்பாலிக்கும் சுருளிவேலப்பரரை மீன ராசியில் பிறந்தவர்கள் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று வழிபட வேண்டும். இத்தல வேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் காட்சி தருகின்றனர். மீன ராசிகொண்டோர் இத்தல சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட குடும்பத்தில் நிலவும் கருத்துவேறுபாடு விலகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit