சூளைமேட்டு துப்பாக்கி சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா

பிறப்பு : - இறப்பு :

சென்னை சூளைமேடு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டானது அரசியல் ரீதியானது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போது, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை புது டெல்கி வருமாறு இந்திய மத்திய அரசாங்கம் அழைத்துள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த விஜயத்தில் பங்குகொள்ளும் பத்து பேர் கொண்ட குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்குகொள்ளவுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையிலான இந்த குழுவில் எதிர்கட்சித் தலைவர் ராஜவரோதயன் சம்பந்தன், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, நிமால் சிரிபால டீ சில்வா, ரஷாட் பதியுதீன், ரஃப் ஹக்கீம், மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
1986 ஆம் ஆண்டு சென்னையின் சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், எமது செய்திச் சேவை நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்புகொண்டு வினவியது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த குற்றச்சாட்டானது அரசியல் நோக்கமுடையதென குறிப்பிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit