கண்ணை மறைத்த காம வெறியால் நேர்ந்த விபரீதம்… கள்ளக் காதலனின் வாக்குமூலத்தை அடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீடுகள் வாங்க, கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி அபிராமி இவர்களுக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர். கணவன்-மனைவி இருவரும் பட்டப்படிப்பு படித்து உள்ளனர். மாத கடைசி என்பதால் நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.

வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். நேற்று அதிகாலையில் அவர், தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே அபிராமியின் மொபட் இல்லை. எனவே அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

ஆனால் அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் பதறிப்போன விஜய், மீண்டும் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து அபிராமி தப்பிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்போன்களுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் அவர், “எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன?, செத்தால் என்ன?” என குறிப்பிட்டு இருந்தார்.

அபிராமிக்கும் அவரது வீட்ருகே பிரியாணி கடை வைத்திருக்கும் சுந்தரம் என்பருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததும், சுந்தரத்துடன் ஓட அவர் பிளான் பண்ணியதும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து பிரியாணி கடை சுந்தரத்தை கைது செய்து அவர் மூலம் அபிராமியை தொடர்பு கொண்டனர். மேலும் அவரது செல் போனை ட்ரேஸ் பண்ணியும் அவர் நாகர் கோவிலில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அபிராமி இன்று அதிகாலை நாகர் கோவிலில் வைத்து கைது செய்யப்பட்டார். இன்று அவர் சென்னை கொண்டுவரப்படுகிறார்.

abirami_dead

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*