பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை

பிறப்பு : - இறப்பு :

அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் நடிகையான வெனஸா மார்குயஷ், பொலிசாரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை வெனஸா மார்குயஷ். இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேசடினாவில் வசித்து வந்தார்.

இவர் சமீப காலமாக மனநிலை பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெனஸாவின் வீட்டு உரிமையாளர் பொலிசாரை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

வெனஸா மார்குயஷ் தன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டுவதாக புகார் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு, வெனஸா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டுள்ளார். அத்துடன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் பொலிசாரை சுட முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் தற்காப்புக்காக நடிகையை சுட்டுள்ளனர். இதனால் வெனஸா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவரிடம் இருந்த துப்பாக்கியை பொலிசார் கைப்பற்றியபோது தான் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெனஸா கடந்த ஆண்டு பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளூனி மீது பல குற்றச்சாட்டுகளை கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit