இந்தியாவிலுள்ள சிறைகளில் பெண் கைதிகள் அனுபவிக்கும் சகிக்க முடியாத கொடுமைகள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வெளியில் இருந்து காணும் பொதுமக்களும், ஊடக செய்திகளும் தான் சிறைச்சாலையில் இருப்பவர்களை கைதிகள் என்று கூறுகின்றன. சிறையில் அவர்களை சிறை வாசிகள் அல்லது இல்லற வாசிகள் என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. சிறைச்சாலையை தண்டனை அனுபவிக்கும் இடமாக கண்டால் அதில் இருந்து திருந்தி வர இயலாது. அது, மனதை கட்டுப்படுத்த இயலாமல் தவறு செய்பவர்களை திருத்தி வேறு ஒரு புதிய மனிதராக வெளிக் கொண்டு வர உதவும் தியான மண்டபம்.

திருந்தாத ஜென்மங்கள் சிலர், செய்த தவறுக்காக வருந்தி திருந்துவோர் சிலர், திருந்த முயற்சித்தாலும் சில கொடுமைகளின் காரணமாக உக்கிரமாகும் சிலர், பெற்ற தண்டனைக்கும் மேலாக சில கொடுமைகளை அனுபவிக்கும் அப்பாவிகள் சிலர் என பல வகையிலான மக்கள் சிறைச்சாலையில் வசித்து வருகிறார்கள். ஆண், பெண் கைதிகளுக்கென தனித்தனி சிறைகள் உள்ளது தான் வழக்கம். ஆனால், ஆண் சிறைச்சாலைகளை காட்டிலும் பெண் சிறைச்சாலைகளில் நிறைய கொடுமைகள் நடக்கின்றன. அதுக் குறித்த ஒரு சிறிய தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்…

மலோதி கலந்தி வழக்கில், அவரது மனைவி பாதல் கலந்தியை குழந்தையுடன் கடத்தலில் இருந்து காப்பாற்றி அழைத்து வந்து அசாம் மாநிலத்தின் பக்சா மாவட்டத்தின் தமுல்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இங்கே இவர்கள் காவலர்களின் கஸ்டடியில் பாதுகாப்பாக இருப்பார்கள் என கருதப்பட்டது. ஆனால், பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக, அங்கே பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர், பாதல் கலந்தியை தனது குவாட்டார்ஸ்க்கு வரவழைத்து கற்பழித்தார்.

சிறைச்சாலையில் தண்டனை பெற்று வசித்து வந்த சில பெண்கள், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பெண் சிறைச்சாலைகளில் மனிதத்தன்மை இன்றி கொடுமைப்படுத்துப்படுவதாக பகிரங்க புகார் அளித்தனர். தங்களை நிர்வாணப்படுத்தி வார்த்தை ரீதியாக, உடல் ரீதியாக துன்புறுத்தியது மட்டுமின்றி, போதிய அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துத் தரவில்லை என்றும் தெரிவித்திருந்தனர். மதுரை அன்னையூரை சேர்ந்த பரமேஸ்வரி இதுக்குறித்த கூறி இருந்ததாவது, “என்னை சிறைச்சாலை வார்டன், பிற வார்டன்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியது மட்டுமின்றி, வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் புண்படுத்தினார்” என்று தெரிவித்திருந்தார்.

பரமேஸ்வரியை போலவே வேறு இரண்டு பெண் சிறைவாசிகளும் சில புகார்களை பதிவு செய்திருந்தனர். நிலக்கோட்டை சப்-ஜெயிலில் திருட்டு குற்றத்திற்காக தண்டனை பெற்று வந்த முனியம்மாள் மற்றும் இல்லீகலாக சாராயம் விற்ற குற்றத்திற்காக கைதாகி இருந்த எம். முத்துலட்சுமி, உண்ணுவதற்கு போதிய உணவு தராமல் கொடுமைப்படுத்தியதாக கூறி இருந்தனர். நான்கில் இருந்து எட்டு பேரை ஒரு சிறிய சிறையில் அடைத்து வைத்திருந்ததனர். அதில் ஒரு மூலையில் இருந்த ஒரு கழிவறையை அனைவரும் பயன்படுத்த வேண்டும். ஒரு திரை மறைவு கூட இருக்காது, என தாங்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து மேலும், தெரிவித்திருந்தனர்.

திகார் சிறையில் ஏமாற்றுதல் மற்றும் மோசடி வழக்கில் சிக்கி கைதான பெண் சிறை வாசியை, அந்த ஜெயிலில் இருந்த வார்டன் ஒருவர், எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்பட்டிருந்த பெண்ணை வைத்து மிரட்டி, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் தெரிவித்திருந்தார். மேலும், துணை கண்காணிப்பாளர் கண்முன்னேயே மணிக்கணக்கில் தன்னை அடித்து துன்புறுத்தினார்கள். பிற ஜெயில் வார்டன்கள் மற்றும் அதிகாரிகள் இதை வெறுமென வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று கூறி இருந்தார்.

சாரதா தமிழ்நாட்டில் வேலூர் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலையில் நீதிபதி ரிமான்ட் செய்த காரணத்தினால் அடைக்கப்பட்டிருந்தார். இங்கே சாரதாவை, சிறைச்சாலையில் முகப்பில் இருந்து சிறையை அடையும் வரை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்றதாகவும், அங்கே தனிமை சிறையில் அடைத்து உடைகளை தரமறுத்ததாகவும் புகார் எழுந்தது. மேலும், எந்த ஒரு அதிகாரியும் இதுக்குறித்து உறுத்தாமல் இருந்ததாகவும் கூறி இருந்தார். நீதிமன்றம் சாரதாவிற்கு ஐம்பதாயிரம் இழப்பீடு பணமாக அளித்தது.

சோனி சோரி என்பவர் மலைவாழ் பழங்குடி இனத்தில் இருந்து வந்த பள்ளி ஆசிரியர். இவரை சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கஸ்டடியில் எடுத்த போது பாலியல் ரீதியான தொல்லைகள் அளித்ததாக புகார் அளித்திருந்தார். இதற்கு எஸ்.பியும் உடந்தை என்று கூறி இருந்தார். தொடர்ந்து எலட்ரிக் ஷாக் கொடுத்து துன்புறுத்தியது மட்டுமின்றி, எஸ்.பி முன்னிலையில் அதன் பிறகு ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி நிற்க வைத்தனர். என் நிர்வாண உடலை கண்டு, கேவலமான வார்த்தைகளால் அந்த எஸ்.பி திட்டி அவமானப்படுத்தினார் என பழங்குடி இனத்தை சேர்ந்த ஆசிரியை தனது புகாரில் கூறி இருந்தார்.

நாக்பூர் சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கு மாதத்திற்கு ஆறு நாப்கின்கள் மட்டும் தான் வழங்கப்படுமாம். இது நிச்சயம் போதாது. இதற்கு முன்னர், பெண் சிறை வாசிகள் நிஜமாகவே மாதவிடாய் நாட்களில் இருக்கிறார்களா? என்பதை உடைகளை நீக்கி நிர்வாணப்படுத்தி பார்த்த பிறகு தான் நாப்கின்ஸ் வழங்கி வந்தனர் என்ற பெருங்கொடுமையும் நடந்து வந்ததாம். இப்படியான புகார்கள் எழுந்த பிறகு, இவைக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*