ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கைதான இலங்கை இளைஞனின் பிணை நிராகரிப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

isis

ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து அவுஸ்திரேலியாவில் தீவிரவாத தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் பிணைக் கோரிய மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியா சென்று சிட்னி பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் 25 வயதான மொஹமட் நிசாம்தீன் என்ற இலங்கையரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

அவரிடம் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆணைங்களில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பல முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்த திட்டங்கள் குறிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் குறித்த நபர், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காக செயற்படுகின்றமை உறுதியாகி இருப்பதாக, அவுஸ்திரேலிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்து பல இலத்திரனியல் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கைது மிகவும் பாரதூரமானது மற்றும் முக்கியமானது என்று அவுஸ்திரேலியாவின் பிராந்திய காவற்துறை புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர் மைக்கல் மெக்ரினன் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit