கிளிநொச்சி படுகொலையில் திடீர் திருப்பம்… ஒருவர் அதிரடியாகக் கைது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kili_girl

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது.

இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என அறிய முடிகிறது.

பொலிஸார் குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலேயே நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

ஆடைத் தொழிற்சாலையொன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றி வந்த பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றும், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமையும் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit