இளம் தந்தையும் மகளும் சடலமாக மீட்பு

பிறப்பு : - இறப்பு :

மஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

31 வயதுடைய தந்தை மற்றும் 11 வயதுடைய மகள் ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக விசமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit