போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்களும் அனைத்து அரசாங்கங்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலானது உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாரிய சவாலாக அமைந்துள்ளதாகவும் அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நேபாளம் காத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் என்ற  பிம்ஸ்டெக் அமைப்பின் நான்காவது அரச தலைவர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றங்களால் வலய பொருளாதார திட்டங்கள் சவாலை எதிர்நோக்கி வருகின்றது.
அத்துடன் அதிகரித்து வருகின்ற வறுமை காரணமாக பாரிய பொருளாதார சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும், அந்த சவால்களை தீர்ப்பதற்கு வலய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பிம்ஸ்டெக் மாநாட்டின் கொள்கையின் படி பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் போது ஊழல், இலஞ்சம், சட்ட விரோத செயற்பாடுகள் மற்றும் அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்துவதை எதிர்த்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்றரை வருடங்களாக இலங்கையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் உறுதிப்படுத்த முடிந்ததாக தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*