அனுசத்திற்கு இனி ஆனந்தம் தான்… ஏனைய 27 நட்சத்திரங்களுக்கும் எப்படி? செப்டெம்பர் மாத நட்சத்திர பலன்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அசுவினி

அஸ்வினிக்கு இது நல்ல மாதம். எல்லாவகையிலும் நன்மைகள் இருக்கும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்குப் பலிக்கும். புதிய வாகனம் அமையும். மாதத்தின் பிற்பகுதி நல்ல பணவரவைத் தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். நீண்டநாள் கனவு ஒன்று நனவாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் இப்போது உண்டு. கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம்.

பரணி

பரணிக்கு சிறப்பான மாதம் இது. கூட்டுத் தொழில் சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். வேலை செய்வோருக்கு இது நல்ல பலன்களைத் தரும் மாதம். சோம்பலை உதறித் தள்ளி சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்கு பலிக்கும்.

கிருத்திகை

கிருத்திகைக்கு இது கெடுதல் செய்யாத மாதம்தான். பாட்டன் வழியில் பூர்வீகச் சொத்து பிரச்னை ஒன்று சாதகமாய் முடியும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு வேலைப்பளு இருக்கும். உங்களில் ரிஷப ராசி இளைய பருவத்தினர் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். வேலை செய்பவர்கள் விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, அதிகமான முதலீடு செய்து தொழில் ஆரம்பிக்கவோ வேண்டாம்.

ரோஹிணி

அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள்தான் நடக்கும். சமீபத்தில் தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ரோகினி நட்சத்திரத்தினருக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும். பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சல்கள் இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். பணவரவு தடைபடாது.

மிருகசீரிடம்

உங்களில் மிதுன ராசியினர் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை இந்த மாதம் மாறும். ரிஷபராசிக்காரர்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகும். சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்த நிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது இருக்கும். சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு நல்லபலன்கள் உண்டு.

திருவாதிரை

திருவாதிரைக்கு யோகம் தரும் மாதம் இது. விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ஆலோசனை சொல்பவர்கள், இன்சூரன்ஸ், வெரிபிகேசன் துறை, தபால் மற்றும் கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். பயணங்களால் லாபங்கள் இருக்கும் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். சிலருக்கு வேலை மாற்றங்களும், நல்ல கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள். வேலைப்பளு அதிகம் இருப்பதால் மன அழுத்தம் இருக்கும்.

புனர்பூசம்

புனர்பூசத்திற்கு அதிர்ஷ்டம் தரும் மாதம் இது. உங்களில் எல்லாத் துறையினருக்கும் இது நல்லநேரம். காரியங்கள் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் உண்டு. தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும்.

பூசம்

பூசத்திற்கு இந்த மாதம் பணவரவு நன்றாக இருக்கும். வருமானத்திற்குக் குறை இருக்காது. வரும் பணத்தில் கொஞ்சமாவது மிச்சம் பிடிப்பீர்கள். உடல் உழைப்பை தொழிலாகக் கொண்டவர்கள், கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு சந்தோஷ நிகழ்ச்சிகள் நடைபெறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இப்போது அவற்றை முடிப்பீர்கள்.

ஆயில்யம்.

ஆயில்யத்திற்கு அதிர்ஷ்டமுள்ள மாதம்தான். சிலருக்கு மட்டும் பங்குச்சந்தையில் நஷ்டங்கள் ஏற்படும். கவனத்துடன் இருங்கள். தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் லாபம் வரும். பணவரவு உண்டு. எதிர்பார்த்திருந்த ஒரு பெரியதொகை கிடைக்கும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வரும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழில் வைத்திருப்பவர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் நன்மைகளைத் தரும். உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். பெண்களால் செலவுகள் உண்டு.

மகம்

இந்தமாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். மாதம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு விசேஷமான பலன்கள் உண்டு. தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். எதிர்காலத்தில் நீங்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் இப்போது அமையும். புதிய அறிமுகங்கள் இப்போது உண்டு. அதனால் நன்மைகளும் உண்டு.

பூரம்

பூரத்தின் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும் மாதம் இது. வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கும் நல்ல பலன்கள் உண்டு. தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் உண்டு. சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். வருமானத்தை விட அதிக செலவு வரும். எதிலும் சிக்கனமாக இருங்கள்.

உத்திரம்

உத்திரத்திற்கு இந்தமாதம் நல்ல லாபங்கள், பணவரவுகள் கிடைக்கும். வீடு வாகன விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். சொந்தவீடு, புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். அடுத்தவரை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி இனி மற்றவர்களுக்கு உதவுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித்துறையினர், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர் காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், போன்றோருக்கு இது நல்ல மாதம்.

அஸ்தம்

அஸ்தத்தின் சோதனைகள் தீரும் மாதம் இது. வருமானங்களும், லட்சியங்கள் நிறைவேறுதலும் இப்போது உண்டு. சிலருக்கு திருமணம், குழந்தை பிறப்பு, வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல மாதம்.

சித்திரை

சித்திரைக்கு இந்த மாதம் ஆனந்தம்தான். உங்களில் சிலருக்கு நல்ல பணவரவு உண்டு. பொருளாதாரப் பிரச்னைகள், கடன் தொல்லைகள் தீரும் மாதம் இது. இளைய பருவத்தினர் முன்னேற்றம் அடைவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டு. வயது கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். சுப வைபவங்கள் இல்லத்தில் உண்டு. சிலருக்கு தாயைப் பற்றிய கவலைகள் வரும். வயதான தாயை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறை வைக்க வேண்டும். தொல்லை தந்த வழக்குகள் சாதகமாக திரும்பும்.

சுவாதி

சுவாதிக்கு முக்கியமான மாதம் இது. நல்ல திருப்பங்கள் இப்போது இருக்கும். நீங்கள் விரும்பிய ஒன்று கிடைக்கப் போகிறது. உங்களில் கணிதம், சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைக்கும். வீடு கட்ட, வாங்க நினைத்திருந்தவர்களுக்கு கனவு நனவாகும். பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும்.

விசாகம்

விசாகத்திற்கு சிரமம் தராத மாதம் இது. ஆரம்பத்தில் சுணக்கமான பலன்கள் இருந்தாலும் பிறகு நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி தொழில், வேலை போன்றவைகள் முன்னேற்றமாக இருக்கும். இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வரும். உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீரப் போகின்றன. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். இளையவர்களில் சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் பக்கத்தில் வருவார்கள்.

அனுஷம்

உங்களின் எல்லாக் கஷ்டங்களும் விலகி விட்டன. அதை நீங்கள் உணரவும் ஆரம்பிப்பீர்கள். அனுஷத்திற்கு இனிமேல் கெடுதல்கள் இல்லை. முயற்சி செய்தும் நடைபெறாத விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் சுலபமாக வெற்றி பெறப் போகின்றன. விழிப்புடனும், கட்டுப்பாடுடனும் இருந்ததன் மூலம் கஷ்டமான ஜென்மச்சனி காலத்தை சமாளித்து விட்டீர்கள். கஷ்டங்கள் இனி இல்லை. சந்தோஷம் மட்டும்தான். இளைய பருவத்தினருக்கு இதுவரை இழுத்தடித்த அனைத்தும் கிடைக்கும். அனுஷம் இனி ஆனந்தப்படும்.

கேட்டை

கேட்டினை சந்தித்த கேட்டை அதிலிருந்து பூரணமாக வெளியே வரும் மாதம் இது. உங்களில் சிலர் நடந்த எதிர்மறை பலன்களால் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை இன்னும் சிறிது நாட்கள்தான். அதன்பிறகு கேட்டைக்கு எந்தக் கெடுதலும் உறுதியாக நடக்காது. அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு சாதக பலன்கள் உண்டு. கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து பேசி வாழ்க்கைச் சிக்கல்களை தீர்க்க முயற்சிப்பீர்கள்.

மூலம்

மூலம் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டிய மாதம் இது. உங்களுடைய வெளிப்படையான பேச்சால் தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப் பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம். அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறும். இளையவர்களுக்கு முன் எச்சரிக்கை தேவைப்படும் மாதம் இது.

பூராடம்

உங்களில் நடுத்தர வயதை தாண்டியவர்களுக்கு இது நல்லமாதம். இளையவர்கள் வேலையிடங்களில் நிதானமாக இருக்க வேண்டும். எவரையும் நம்ப வேண்டாம். நம்பிக்கை துரோகம் நடக்கும். காதல் வரப்போகிறது. பின்னாலேயே அழுகையும் வரப் போகிறது. இளம்பெண்கள் உஷார். இளைஞர்கள் சிறிது காலம் குடிப்பழக்கத்தை கை விடுங்கள். பாரில் உள்ளே நுழைந்ததும் குடிப்பதற்கு முன்பே சண்டை வரப் போகிறது. ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. ஆசைகாட்டி இழக்க வைக்கும்.

உத்திராடம்

உத்திராடத்தின் சேமிப்பு கரையும் மாதம் இது. வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போது உங்களுக்கு நடக்கும். எதிலும் மாற்றங்கள் உண்டு. அது நல்லதாகவும் இருக்கும். கடன் தொல்லையில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். உங்கள் செயல்கள் அனைத்திலும் பதற்றமும், படபடப்பும் காணப்பட்டாலும் மனோதைரியம் கூடுதலாகும். புதிய அனுபவங்கள் கிடைக்கும் மாதம் இது.

திருவோணம்

பணம் சம்பாதிப்பதில் உங்களுக்கு இது நல்ல மாதம். சிலருக்கு புனிதத் தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். வேலையில் பாராட்டப் படுவீர்கள். இளைய பருவத்தினருக்கு தகுதிகேற்ற வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த சிக்கல்கள் தீரும். தொழில் அமைப்புக்கள் நன்றாக நடைபெறும். கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். சிரமங்கள் தீரும் மாதம் இது.

அவிட்டம்

அவிட்டத்தின் ஆனந்த மாதம் இது. அலுவலகங்களிலும், தொழிலிலும் எதிர்ப்புகள் அகலும். போட்டியாளர்கள் விலகுவார்கள். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். கடன், வழக்கு விவகாரங்களில் சிக்கி தூக்கத்தை இழந்தவர்களுக்கு அவை நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்ரும். உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுக்கும். பிரச்னைகளை யார் உதவியும் இன்றி தனியாகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். அவிட்டம் நட்சத்திரக் காரர்களுக்கு நல்ல மாதம் இது.

சதயம்

சதயத்திற்கு இந்த மாதம் சந்தோசம் இருக்கும். வேலையில் நிம்மதியற்ற நிலைமையையும், தொந்தரவுகளையும் சந்தித்தவர்கள் அது நீங்கி நிம்மதியான சூழல் அமையப் பெறுவீர்கள். பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள், சட்ட வல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி, சிட்பண்ட் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த மாதம் நன்மைகளைத் தரும். வேறு இன, மொழி, மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.

பூரட்டாதி

மாதத்தின் பிற்பகுதியில் பூரட்டாதிக்கு நல்ல பலன்கள் நடக்கும். பணவரவிற்கு குறை இருக்காது. எதையும் சமாளித்து விடுவீர்கள். இளையவருக்கு வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீரும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாக்குவாதங்களை தவிருங்கள். உறவினர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும்.

உத்திராட்டாதி

உத்திராட்டாதியினர் இந்தமாதம் நன்மைகளை அடைவீர்கள். சென்ற காலங்களில் சங்கடங்கள் தந்த பிரச்னைகள் விலகும். சகோதர விஷயங்களில் ஆதரவான நிகழ்வுகள் இருக்கும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வெளிநாட்டு தொடர்பால் நன்மைகள் உண்டு. வேற்று மதத்தினர் உதவுவார்கள். தந்தைவழி உறவில் நல்ல பலன்கள் இருக்கும். மூத்த அண்ணன், அக்காக்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். இதுவரை நல்லவேலை கிடைக்காத இளையவர்களுக்கு இந்தமாதம் அந்தக்குறை நீங்கும்.

ரேவதி

ரேவதிக்கு உற்சாகம் தரும் மாதம் இது. உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி இப்போது நட்பு பாராட்டுவார்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பளஉயர்வு உண்டு. இஷ்டமில்லாத வேலையில் இருந்த இளைஞர்களுக்கு மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் விரும்பிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். அனைத்து தடைகளும் விலகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*