வாகன விபத்தில் சிக்கி இளைஞன் பலி… திருகோணமலையில் சம்பவம்

பிறப்பு : - இறப்பு :

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கப்பல்துறை பிரதேசத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தல் 24 வயது இளைஞர் மரணமானதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பிரசேத்தில் இருந்து வந்த காரும், திருகோணமலையில் இருந்துசென்ற மோட்டார் சைக்கிளும் கப்பல்துறைப் பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 98ம் காலனி அரபா நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

காரில் பயனித்த கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் ஒரு பெண்னும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இளைஞரின் சடலம் திருகோணமலை பொது வைத்தயசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit