வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

students

வட மாகாணத்தின் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளுக்கு அங்கர் நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல வருட காலங்களுக்குப்பின் வடமாகாணம் முன்னேற்றப் பாதையில் செல்லும் இந் நிலையில், பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஒரு போட்டி ஏற்பாடு செய்து அதில் மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வத்தில் நடனம், சங்கீதம், தொழிநுட்பம் என்ற அடிப்படையில் இந்த போட்டியை நடாத்த அங்கர் தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களை தேர்ந்தெடுத்து எமது முதல் சுற்றை செய்ய முடிவு செய்யப்பட்டடுள்ளது.

இரண்டாவது சுற்றை கிளிநொச்சியிலும், இறுதி சுற்றை அக்டோபர் மதம் 13ம் திகதி யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

இதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு.கந்தையா சர்வேஸ்வரன் அனுமதி வழங்கியுள்ளார்.

அதன் பிரகாரம் வடமாகாண கல்விப் பணிப்பாளர் , வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் அழைத்து இன்று யாழ்மாநகரில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

வலயக்கல்வி பணிப்பாளர்கள் அவர்களுக்கு கீழ் வரும் பாடசாலை அதிபர்களுக்கு இப்போட்டிகளின் விபரத்தை எடுத்துக்கூறி பாடசாலை மாணவர்களை பங்கேற்க உற்சாகப்படுத்தி ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் வரும் மாணவர்களின் எண்ணிக்கையை எமக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதிக்கு முன் தெரிவிக்கும்படி குறித்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit