துலாமிற்கு இடம் மாறும் சுக்கிரன்… 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sukkran

காதல் நாயகன் சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து தனது ஆட்சி வீடான துலாம் ராசியில் செப்டம்பர் 1ஆம் தேதி சனிக்கிழமை முதல் சஞ்சாரம் செய்யப்போகிறார். ஜனவரி 1, 2019ஆம் ஆண்டு வரை சுக்கிரன் துலாம் ராசியில் அமர்ந்திருப்பார்.

சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே.

சுக்கிரன் மாதம் ஒருமுறை இடம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்ந்தாலும் இம்முறை 4 மாதங்கள் துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். துலாம் ராசியில் ஏற்கனவே குரு அமர்ந்து உள்ளார். இனி சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். துலாமில் சுக்கிரன் குரு கூட்டணி அக்டோபர் வரை நடைபெற உள்ளது. இந்த கால கட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திரத்தில் சுக்கிரன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். ஏற்கனவே குருபகவான் 7ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பான அம்சமாகும். நன்மைகள் பல நடைபெற வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தைகளுக்கு வெள்ளியால் ஆன பொருட்களை தானமாக கொடுக்கலாம்.

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். பாக்கெட்டில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். அம்மன் கோவிலுக்கு அரிசியும் வெல்லமும் தானமாக கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு வருகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது உற்சாகம் கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வெளிநாடு பயணம் சென்று வர நல்ல சமயம் இதுவாகும். வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வழிபடலாம்.

கடகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சர்க்கரை தானமாக தரலாம்.

சிம்மம்

தன வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து இருந்த சுக்கிரன் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். ங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலத்தில் அவ்வப்போது கவனம் தேவை. வேலை விசயமாக சிறுபயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

கன்னி

உங்கள் ராசியில் நீச்சம் பெற்றிருந்த சுக்கிரன் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தன வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கப் போகும் காலமிது. திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் அதிகரிக்கும். பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அம்மன் கோவில்களும் வெண்மை நிற மலர்களை வாங்கிக் கொடுக்க மேலும் பல நன்மைகள் நடக்கும்.

துலாம்

உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறப்போகிறார். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறுவதால் சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.

தனுசு

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமரப் போகும் சுக்கிரனால் வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். பண வருவாய் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீட்டில் துளசி செடிகளை வளர்க்க மேலும் பல நன்மைகள் நடைபெறும்.

மகரம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். மனைவி உடனான காதல் அதிகரிக்கும். காதலி,நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். மேலும் நன்மைகள் நடைபெற வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம்.

மீனம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். குருபகவானும் ஏற்கனவே எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் செலவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும். செலவு வருதே என்று கவலை வேண்டாம் வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளிக்க நன்மைகள் நடைபெறும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit